மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (RIP Sushant Singh Rajput) ஜூன் 14 அன்று தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் எடுத்த இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த சம்பவத்திற்குப் பிறகு, பல விவாதங்கள் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ளன. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்று சிலர் நம்புகிறார்கள், மற்றவர்கள் பாலிவுட் கலை உலகில் வாரிசு நட்சத்திரங்களின் ஆதிக்கம் காரணமாக ஓரம் கட்டப்பட்டதால், அதனால ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டனர் என்று நம்புகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படி பாலிவுட் (Bollywood) சினிமாவில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் சேகர் சுமன் (Shekhar Suman) செய்த ட்வீட் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது தற்கொலைக்கு முன்னர் சுஷாந்த் ஒரு கடிதம் எழுதியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


READ | தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை


"சுஷாந்த் சிங் ராஜ்புத் (Sushant Singh Rajput) போன்ற புத்திசாலி, தைரியமான, வலிமையான ஒருவர் தற்கொலை செய்திருந்தால், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதியிருப்பார். எல்லோரையும் போலவே, நான் அவரின் மரணத்தை பார்ப்பது மிகவும் வித்தியாசமானது மற்றும் தீவிரமானது என்று நான் மனதார உணர்கிறேன்" என்று சேகர் சுமன் (Shekhar Suman) ட்வீட் செய்துள்ளார்.


 



READ | நயன்தாராவிற்கு கொரோனாவா?.... விக்னேஷ் சிவன் வெளியிட்ட பகீர் தகவல்...!


தற்போது சேகர் சுமனின் ட்வீட் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. சிறப்பு என்னவென்றால், சேகர் சுமன் பெரும்பாலும் திரை உலகில் நடக்கும் நிகழ்வுகளை வெளிப்படையாக பொதுவெளியில் கூறுபவர். 


மேலும் அவர் சமீபத்தில் சுஷாந்தின் (Sushant Singh) மறைவு குறித்து ட்வீட் செய்திருந்தார். அதில் திரை உலகில் புலிகளாக தன்னை காட்டிக்கொண்டவர்கள், சுஷாந்தின் ரசிகர்களின் குரலைக் கண்டு பயத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்று பதிவிட்டிருந்தார்.