மிஸ் இந்தியா போட்டியில் இருந்து விலகிய ஷிவானி ராஜசேகர்
தமிழ்நாடு சார்பில் மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பங்கேற்க இருந்த ஷிவானி ராஜசேகர் பங்கேற்க இருந்த நிலையில், திடீரென விலகியுள்ளார்.
பிரபல நடிகர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ராஜசேகர் ஆகியோரின் இளைய மகள் ஜீவிதா ராஜசேகர். மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார். மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருக்கும் அவர், திரைத்துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் வெளியான WWW படத்தில் ஹீரோயினமாக அறிமுகமான அவர், தமிழில் ‘அன்பறிவு’ படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார். ’நெஞ்சுக்கு நீதி’ படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படத்துக்கு வருதற்கு முன்பு அழகிப் போட்டிகளிலும் பங்கேற்று வந்தார்.
மேலும் படிக்க | மாதவன் அனுப்பிய புகைப்படத்தால் கடுப்பான அவரது மச்சான்
ஃபெமினா மிஸ் இந்தியா படத்தை வென்றிருந்த அவர், தமிழ்நாடு சார்பில் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்க இருந்தார். ஆனால் திடீரென அதில் கலந்து கொள்ளவில்லை என அறிவித்துள்ளார். மலேரியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அவர், அதனால் அழகு பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.
ஷிவானி ராஜசேகர் மேலும் பேசும்போது, " இந்த ஆண்டு நடைபெறும் மிஸ் இந்தியா போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை. மருத்துவ படிப்பிற்கான எழுத்துத் தேர்வு மற்றும் மலேரியாவால் பாதிக்கப்பட்டுவிட்டதால், அழகு பயிற்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியவில்லை. அடுத்த மாதம் பிராக்டிக்கல் தேர்வும் இருக்கிறது.
இதில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால், நான் மிஸ் இந்தியா போட்டிக்கு தயாராக முடியாது. இந்த ஆண்டு விலகியிருந்தாலும், அடுத்த ஆண்டு நிச்சயம் கலந்து கொள்வேன்" எனத் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த திடீர் அறிவிப்பால் தமிழ்நாடு சார்பில் இந்தமுறை யாரும் மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ளவில்லை.
மேலும் படிக்க | புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR