Hansika Hormonal Injection Rumor: நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் ஹன்சிகா பணியாற்றியுள்ளார். அவர் பல பிளாக்பஸ்டர்களிலும் அதிக வசூல் செய்த படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் அவரது நடிப்பு வாழ்க்கை, 2004ஆம் ஆண்டில் ஷாகா லகா பூம் பூம் மற்றும் டெஸ் மெய்ன் நிக்லா ஹோகா சந்த் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாகவே தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹார்மோன் ஊசி


பின்னர் ஹிருத்திக் ரோஷனின் 'கோய் மில் கயா' படத்தில் நடித்தார். ஹன்சிகா, 2007ஆம் ஆண்டில் வெளியான ஹிமேஷ் ரேஷம்மியாவுடன் ஆப் கா சுரூர் படத்திலும் நடித்தார். எனவே, அவர் தனது உண்மையான வயதை விட, விரைவாக சற்று முதிர்ச்சியாக காண ஹார்மோன் ஊசிகளை எடுத்துக்கொண்டார் என்ற வதந்திகள் அதிகம் பரவியுள்ளது. இந்நிலையில், இந்த வதந்திகள் குறித்து, நடிகை ஹன்சிகாவும், அவரது தாயாரும் பதில் அளித்துள்ளனர்.  



ஒரு தாய் அப்படி செய்வாரா?


ஹன்சிகாவின் அம்மா கூறுகையில், "எங்களுக்கு இது மிகவும் மன வேதனையை அளித்தது. பல வருடங்களாக இதுகுறித்து மௌனமாக இருந்தோம். ஹன்சிகா சீக்கிரமாக வளர வேண்டும் என்பதற்காக ஏதோ ஊசி போட்டிருப்பதாக என் மீது  குற்றம் சாட்டினார்கள். எந்த ஊசி என்று சொல்லுங்கள், நான் பணக்காரி ஆகிறேன். எல்லோரிடமும் கொடுத்து பணத்தை சம்பாதிக்கிறேன். எந்த தாயாவது இதுபோன்று செய்வார்களா? இல்லை அதுபோல் வேகமாக வளர ஏதும் ஊசி உள்ளதா என்ன?" என்றார். 


மேலும் படிக்க | சிகிச்சைக்கு பிறகு பாம்பே ஜெயஸ்ரீ உறவினர் வீட்டில் ஓய்வு!


இனி மறைக்கப்போவதில்லை


ஹன்சிகா மேலும் கூறுகையில், "நீங்கள் ஒரு பிரபலமாக இருப்பதால் இதுபோன்று ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இது நீங்கள் தயாராக இருக்க வேண்டிய ஒன்றாகும். ஆரம்பத்தில், நான் சமூக ஊடகங்களில் இருந்ததால் அவரிடம் விஷயங்களை மறைத்தேன், ஆனால் சமூக ஊடகங்கள் இல்லாதபோதும் இவை அனைத்தும் நடந்தன. எனவே, எங்களை பற்றி எழுத்தப்பட்ட, சொல்லப்பட்ட எல்லா அபத்தங்களையும் பற்றி பேசும் நபர்களைப் பற்றி நாங்கள் அறிந்திருக்கவில்லை. என் கல்யாண பேச்சு வந்தபோதே இது மீண்டும் பரவ தொடங்கியது. எனவே, அதை மறைக்கப்போவதில்லை, ஏனென்றால் அதில் உண்மையே இல்லை" என்றார். 


பலரும் பொறாமைப்படுவது தெரிகிறது


மேலும் ஹன்சிகா கூறுகையில்,"இன்று வரை என்னால் ஊசி போட முடியாது. என்னால் பச்சை குத்த முடியவில்லை, ஏனென்றால் நான் ஊசியைக் கண்டு பயப்படுகிறேன். ஒரு தாய் ஏன் ஒருவரிடம் அதைச் செய்ய சொல்வார்? பலர் எங்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. பலரும் இன்னும் என்னைப் பற்றிப் பேசுவதை பார்க்கையில் நான் சரியான திசையில் பயணிக்கிறேன் என்று நினைக்கிறேன். எனவே, நீங்கள் தொடர்ந்து பேசுங்கள்" என்றார்.


மேலும் படிக்க | மலையாளத்தின் முதல் வெப்தொடர்..கேரளா க்ரைம் பைல்ஸ் டீசர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ