ஜீவா - காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதையடுத்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் 2-வது சீசனில் பங்கேற்று பிரபலமடைந்தார் யாஷிகா ஆனந்த்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் கைவசம் உத்தமன், ராஜ பீமா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவு தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுவிட்டு திரும்பினார். காரை யாஷிகா ஆனந்த் ஓட்டியதும் அவருக்கு அருகே அவரது தோழி வள்ளிச்செட்டி பவானி அமர்ந்திருந்தார். அப்போது அவரது கார் கிழக்கு (Car Accident) கடற்கரைச் சாலையில் சூலேறிக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.


ALSO READ | யாஷிகாவின் தற்போதைய நிலை என்ன; எலும்பு முறிவா, நடந்தது என்ன


இந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் (Yashika Aannand) படுகாயம் அடைந்தார். விபத்தில் சிக்கிய யாஷிகாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவருடன் பயணம் செய்த இரண்டு பேருக்கும் படுகாயம் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் காரில் இருந்த தோழி வள்ளிச்செட்டி பவானி அதே இடத்திலேயே உயிரிழந்தார். இவர் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் ஆவார். 


தற்போது போதையில் யாஷிகா ஆனந்த் காரை ஓட்டினாரா அவருடன் இருந்தவர்களும் குடித்திருந்தனரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிவேகமாக கார் ஓட்டியதாக யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் தற்போது சென்னை அருகே விபத்து ஏற்படுத்திய நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமத்தை மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸார் பறிமுதல் செய்தது.


ALSO READ | பயங்கர கார் விபத்து; நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்: தோழி மரணம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR