’ஆதிபுருஷ்’ படத்தை பார்க்க திரையரங்கிற்குள் வந்த குரங்கு: வீடியோ வைரல்
ஆதிபுருஷ் படத்தின் போது திரையரங்கிற்கு குரங்கு ஒன்று வந்த வீடியோ பயங்கரமாக வைரலாகி வருகின்றது.
ஓம் பிரகாஷ் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் ராமராக நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் இன்று அதாவது ஜூன் 16 ஆம் தேதி வெளியாகியுள்ளது. ராமயண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் ஆதிபுருஷ். ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இன்று உலகம் முழுக்க இன்று வெளியாகியுள்ளது.
ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் ஆறு மாதங்களுக்கு முன்னரே வெளியாகி கடுமையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு படத்தின் VFX காட்சியை சரிசெய்து படத்தை தாமதமாகவே தற்போது வெளியிட்டுள்ளனர். இதையடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே தற்போது பெற்று வருகின்றது.
முன்னதாக ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகும் முன்பே இயக்குனர் ஓம் பிரகாஷ் ராவத் திரையரங்கிற்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். அந்தவகையில் திரையரங்கங்களில் ஒரு சீட்டை ஆஞ்சநேயருக்காக ஒதுக்கவேண்டும் என படத்தின் இயக்குனர் ஓம் பிரகாஷ் ராவத் கேட்டுக்கொண்டார். அதன்படி திரையரங்கங்கள் அனைத்தும் ஒரு சீட்டை ஆஞ்சநேயருக்காக ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாள் முதல் காட்சியை இன்று ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். மேலும் பிரபாஸின் ரசிகர்கள் ஆதிபுருஷ் படத்தை அலப்பறையாக கொண்டாடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது திரையரங்கு ஒன்றில் ஆதிபுருஷ் படம் திரையிட்டபோது குரங்கு ஒன்று திரையரங்கிற்குள் நுழைந்த வீடியோ ஒன்று தான் தற்போது இணையதளத்தில் வெகுவாக வைரலாகி வருகின்றது.
ஆதிபுருஷ் படத்தை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் திரையரங்கிற்குள் குரங்கு நுழைந்ததை பார்த்து ஆச்சரியடைந்து, "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷம் எழுப்பத் தொடங்கினர். அதனை வீடியோ எடுத்து சமூகத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.
குரங்கின் வீடியோவை இங்கே காணுங்கள்:
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரும் பிரபாஸ், பாகுபலி படத்தின் மூலம் வேறு லெவல் உச்சத்திற்கு சென்றார், இதைத் தொடர்ந்து இவரது சம்பளம் தென்னிந்தியாவில் அதிகளவானது. அதன் பின் அவர் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் மிகப்பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவானாது, ஆனால் இந்த படங்கள் தோல்வியையே சந்தித்தது.
ஆதிபுருஷ் படம் எப்படி உள்ளது? ட்விட்டர் திரைவிமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ