பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா கடத்தல்? வைரலாகும் வீடியோவால் மக்கள் அதிர்ச்சி..!

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா கடத்தப்பட்டது போன்ற வீடியோ வைரலாக்கி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.   

Written by - Yuvashree | Last Updated : Jun 15, 2023, 05:27 PM IST
  • பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா.
  • பல நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலம்.
  • இவரை கடத்துவது போன்ற வீடியோ வைரல்.
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா கடத்தல்? வைரலாகும் வீடியோவால் மக்கள் அதிர்ச்சி..! title=

தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வருபவர் பிரியங்கா. தனது ஜாலியான பேச்சுக்கும் கலகல சிரிப்புக்கும் பெயர் போனவர் இவர் கடத்தப்பட்டது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

பிரியங்கா கடைத்தலா? 

தனியார் தொலைக்காட்சி ஒன்று பிரியங்கா குறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் பிரியங்கா மருத்துவமனையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பது போலவும் அவரை மர்ம நபர்கள் கடத்தியுள்ளது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

ப்ரமோ வீடியோ:

பிரியங்கா தற்போது ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பாடல் பாடும் திறமை உடையோரை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை பிரியங்காவுடன் சேர்ந்து அவ்வப்போது மாகப ஆனந்தும் தொகுத்து வழங்குவார். ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் ரெமோ வீடியோவில் தான் பிரியங்கா கடத்தப்பட்டது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியின் ப்ரமோ வீடியோக்களில் ஒன்றாகும். எனவே இது கண்டிப்பாக நிகழ்ச்சியின் stunt என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைக்கும் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர்: படம் ஹிட் கன்பார்ம்

வித்தியாசமான ப்ரமோ..

வழக்கமாகவே ஒரு நிகழ்ச்சியின் டி.ஆர்.பிஐ ஏற்ற வேண்டும் என்றால் அதற்காக பல்வேறு ஜித்து வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். பிரியங்காவின் கடத்தல் வீடியாேவை போல பல வீடியோக்கள் இது பாேன்று வெளிவந்துள்ளன. அவை ரசிகர்களுக்கு பிடித்து போய் ட்ரெண்டாவதும் வழக்கம். இதே போல ஸ்டார் மியூசிக்கின் ப்ரமோவிற்காகத்தான் பிரியங்காவின் கடத்தில் வீடியோவும் வெளியாகியுள்ளது. இதைக்கண்டு ரசிகர்கள் பயப்பட வேண்டாம். இருப்பினும், பிரியங்காவை கடத்தியது போன்ற காட்சிக்கு பின்னர் விளக்கம் அளிக்கப்பட்ட வீடியாே ஒன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிக்பாஸ் பிரியங்கா:

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வருகிறார் பிரியங்கா. பல நட்சத்திரங்களை வளர்த்து விடும் ஒரு தனியார் சேனலில் இவரும் ஒரு நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இவரது சிரிப்பான பேச்சும் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பும் பலரையும் கவர்ந்தது. இதுவே இவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அழைக்கவும் காரணமாக இருந்தது. அதுவரை பிரியங்காவின் ஒரு முகத்தை மட்டுமே பார்த்து வந்த ரசிகர்கள் அவரின் ஏராளமான முகத்தை பார்த்தனர். ஆனால் அந்த முகங்களும் அனைவருக்கும் பிடித்துப் போனது. 

மேலும் படிக்க | நடிகர் பாவா லட்சுமணனின் கால் கட்டை விரல் அகற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News