மோகன்லால்-ன் "ஒடியன்" திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மாருபட்ட தோற்றத்தில் நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ஒடியன். 123 நாள் படப்பிடிப்பிற்கு பின்னர் இப்படத்தின் படபிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.



ஒடியன் - இப்படத்தில் இளம் நாயகனாக நடிக்கின்றார் நம் மோகன் லால், இதற்காக இவர் 15 கிலோ எடை வரை குறைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான இப்படத்தின் டீஸரில் மலையாள சூப்பர் ஸ்டார் லால் மிகவும் மெலிந்து, இளமையான தோற்றத்தில் தோன்றினார். இதனால் ரசிகர்களிடையே பெறும் எதிர்பார்ப்பினை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் கூறுகையில்... லால் இப்படத்திற்காக கடுமையாக உழைத்து 18-கிலோ வரை குறைத்துள்ளார், மேலும் இதற்காக அவர் பிரான்சை சேர்ந்த யோகா மற்றும் தோல் மருத்துவர்களின் உதவியை நாடி உடற்பயிற்சி மேற்கொண்டு தனது இலக்கை அடைந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.


இப்படத்திற்கான படப்பிடிப்புகள் பாலக்காடு, கோவை, பொள்ளாச்சி, ஹைதராபாத், வாரணாசி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 18-ஆம் நாள் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்படிப்புகள் முழுவதுமாக முடிவடைந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!