குடிப்பழக்கம் இருக்கா? நெட்டிசனின் கேள்விக்கு பதிலடி கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்
Shruti Haasan Bold Reply: இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை ஸ்ருதிஹாசனிடம் நெட்டிசன்கள் சிலர் கேட்டிருந்த கேள்விகளும், அதற்கு அவர் ரசிகர்கரின் கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மொழிப்படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப்படங்களிலும் பிசியாக இருந்து வருகிறார். தமிழில் இவரது படங்கள் வரவில்லையென்றாலும் மற்ற மொழிகளில் இவரது படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. இவரது நடிப்பில் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகை சமயத்தில் இரண்டு படங்கள் வெளியானது. பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக 'வீர சிம்மா ரெட்டி' படத்திலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக 'வால்டர் வீரைய்யா' படத்திலும் நடித்திருந்தார். தற்போது 'கேஜிஎஃப்' புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். யாஷ் நடித்திருந்த 'கேஜிஎஃப்' போலவே சலார் படமும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை ஸ்ருதிஹாசன் எவ்வளவுதான் படங்களில் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி தனது வொர்க்அவுட் வீடியோ போன்ற அன்றாட பல வேலைகளை சமூக வலைத்தளத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் அப்டேட் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். இந்த கேள்வி, பதில் கலந்துரையாடலில், ரசிகர் ஒருவர் நடிகை ஸ்ருதிஹாசனிடம் "உங்களுக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் இருக்கிறதா" என்று கேள்வி எழுப்பிருந்தார். இதற்கு வெளிப்படையாக பதிலளித்த நடிகை ஸ்ருதிஹாசன், எனக்கு அந்த மாதிரியான பழக்கமெல்லாம் கிடையாது. மேலும் எனக்கு குடிப்பழக்கமும் இல்லை. இதையெல்லாம் நான் ஒருபோதும் செய்யவும் மாட்டேன். குடிப்பழக்கம் இல்லாத ஒரு வாழ்க்கையை தான் தற்போது நான் வாழ்ந்து வருகின்றேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! விஜய் பிறந்தநாளில் புது போஸ்டர் வெளியீடு
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது ரசிகர்களிடம் தன்னிடம் எதாவது வேடிக்கையான கேள்விகளை கேட்குமாறு பதிவிட்டிருந்தார். நடிகை ஸ்ருதிஹாசனின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் உடனே சரமாரியாக கேள்விகளை அள்ளி வீச தொடங்கினர். 'Are you an verjain?' என்று கேட்டிருந்தார், இதனை பார்த்த நடிகை ஸ்ருதிஹாசன் அந்த நபரை ''virgin' என்று சரியாக எழுத்துப்பிழையில்லாமல் எழுதுமாறு கேட்டு அந்த நபரை நோஸ்கட் செய்திருந்தார், மற்றொரு நெட்டிசன், ஆல்கஹாலை பற்றி கேள்வி எழுப்பினார், அதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், தான் இப்போது குடிப்பழக்கம் இல்லாமல் இருப்பதாகவும், கடந்த 6 வருடங்களாக அந்த பழக்கம் இல்லாமல் வாழ்ந்து வருவதாக கூறினார். மேலும் நான் ஆல்கஹால் எதையும் தொடுவதில்லை, அது எனக்கு பிடிக்கவில்லை என்றும் வேணுமென்றால் ஆல்கஹால் இல்லாத பீரை தேர்ந்தெடுப்பேன் என்று கூறினார். இதனைத்தொடர்ந்து மற்றொரு நெட்டிசன் அவரிடம் உங்களுடன் டேட் செய்யலாமா என்று கேட்டதற்கு, அவர் சிறிதும் யோசிக்காமல் 'நோ' என்று பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து வரும் சலார் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. அப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதுதவிர இந்தி படங்களிலும் நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். சாந்தனு என்கிற டூடுல் கலைஞரை காதலித்து வரும் ஸ்ருதிஹாசன், தற்போது அவருடன் லிவ்விங் டுகெதராக ஒரே வீட்டில் வாழ்ந்தும் வருகிறார்.
மேலும் படிக்க | பிரபல பாலிவுட் நடிகருடன் ஜோடி சேர்ந்த ராஷ்மிகா மந்தனா..! வைரலாகும் புகைப்படங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ