சிம்புவின் STR 48 படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குனர் தேசிங் பெரியசாமி 'STR 48' படத்தில் கமல்ஹாசனை சக்திவாய்ந்த கேமியோ ரோலில் நடிக்கவைக்க விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Mar 15, 2023, 05:56 PM IST
  • தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு 'STR 48' படத்தில் நடிக்கிறார்.
  • 'STR 48' படத்திற்காக சிம்பு தாய்லாந்தில் தற்காப்பு கலை கற்று வருகிறார்.
  • 'பத்து தல' ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சிம்பு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்புவின் STR 48 படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லேட்டஸ்ட் அப்டேட்! title=

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி, தற்போது நடிகர் சிம்புவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார்.  இந்த படத்திற்கு தற்காலிகமாக 'STR 48' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது, சிம்புவின் கேரியரில் மிகப்பெரிய திட்டமாக இந்த படம் அமைகிறது.  இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.  தற்போது இப்படம் குறித்து ஒரு லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது, அதாவது இயக்குனர் தேசிங் பெரியசாமி 'STR 48' படத்தில் கமல்ஹாசனை கேமியோ ரோலில் நடிக்கவைக்க விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  

மேலும் படிக்க | Bloddy Sweet லோகேஷ் கனராஜ்! வங்கி ஊழியர் டூ பான் இந்தியா இயக்குநர்! சாதித்தது எப்படி?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'விக்ரம்' படத்தில் சூர்யா எப்படி ரோலக்ஸ் என்கிற கேமியோ ரோலில் நடித்திருந்தாரோ அதேபோன்று 'STR 48' படத்தில் கமல்ஹாசனின் கதாபாத்திரமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.  நடிகர் சிம்பு அடிக்கடி கமல்ஹாசனை தனது குருவாக நினைப்பதாக பல பேட்டிகளில் சொல்லிவரும் நிலையில், அவருடன் கமல்ஹாசன் ஒரே பிரேமில் இணைந்தால் அது அவருக்கு பெரும் சந்தோஷத்தை கொடுக்கும்.  'STR 48' படத்திற்காக நடிகர் சிம்பு தாய்லாந்தில் பிரத்தேயேகமாக தற்காப்பு கலை கற்று உடலை மெருகேற்றி கொண்டு இருக்கிறார்.  தற்போது தாய்லாந்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்து வரும் நடிகர் சிம்பு மார்ச் 18-ம் தேதியன்று நடைபெறவுள்ள 'பத்து தல' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தற்போது சிம்பு நடிப்பில் 'பத்து தல' படம் வெளியாகவுள்ளது, இந்த படத்தை ஒபேலி.எம்.கிருஷ்ணா இயக்கியுள்ளார்.  இப்படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இதையடுத்து கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன்-2' படத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார்.  இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இப்படத்தின் பணிகளை முடிக்க படக்குழு முழுவீச்சில் வேலை செய்து வருகிறது, தற்போது படக்குழு படப்பிடிப்பிற்காக தென்னாப்பிரிக்காவிற்கு செல்லவுள்ளது.  மேலும் கமல்ஹாசன், ஹெச்.வினோத் இயக்கத்தில் 'KH 233' மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் 'KH234' ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

மேலும் படிக்க | சூர்யாவை விட மாஸ் லுக்கில் அருண் விஜய்! லீக் ஆன வணங்கான் புகைப்படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News