ஸ்ருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!
நடிகையும் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நடிகை, பாடகி மற்றும் இசையமைப்பாளர் என பன்முக தன்மை கொண்டு விளங்குபவர் ஸ்ருதிஹாசன். சில பாடங்களில் பாடல்களை பாடி வந்தவர 2011-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான பின், பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மொழிபடங்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் படிக்க | பா.ரஞ்சித் இயக்கும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு எப்போது?
மேலும் பிரபாஸுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடித்துள்ள படம் விரைவில் வெளியாகவுள்ளது, அதனை தொடர்ந்து பாலகிரிஷ்ணாவின் படம் ஒன்றில் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இணையத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு தயங்காமல் பதில் தருவதில் இவர் வல்லவர். ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவிடம் ரசிகர்க ஒருவர் எப்போது திருமணம் என்று கேட்டதற்கு இருவரும் கூலாக பதிலளித்த நிகழ்வு இணையத்தில் உலா வந்தது.
தற்போது ஸ்ருதிஹாசன் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ரசிகர்களுக்கு அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் 'நான் மிகவும் பாதுகாப்பாக தான் இருந்தேன் இருப்பினும் எனக்கு கொரோனா உறுதியாகிவிட்டது. நான் குணமடைந்து வருகிறேன், விரைவில் குணமாகி வந்து உங்களை சந்திப்பேன்' என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் குணமடைவீர்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்னர் தான் கமல்ஹாசன் கொரோனா நோயால் அவதிப்பட்டு உடல்நிலை தேறிவந்த நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
மேலும் படிக்க | AK61: அஜித்துடன் நடிக்கப்போகும் பிக்பாஸ் பிரபலம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR