பா.ரஞ்சித் இயக்கும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

ஹிந்தியில் பா.ரஞ்சித் இயக்கபோகும் 'பிர்சா' படத்தின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டிற்குள் தொடங்கப்படும்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 26, 2022, 02:08 PM IST
  • பிரிட்டிஷ் காலனித்துவ ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக நின்றவர் பிர்சா முண்டா
  • ரஞ்சித் இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
பா.ரஞ்சித் இயக்கும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு எப்போது? title=

இயக்குனர் பா.ரஞ்சித் 'பிர்சா' படத்தின் மூலம் பாலிவுட்டில் ஆக்ஷன் கலந்த  திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.  இந்த படத்தை நமஹ் பிக்சர்ஸின் கீழ் ஷரீன் மந்திரி மற்றும் கிஷோர் அரோரா ஆகியோர் தயாரிக்கின்றனர்.  இது 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனித்துவ ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக நின்ற ஜார்கண்டின் பழங்குடித் தலைவரான பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

birs

மேலும் படிக்க | பா.ரஞ்சித் - கமல்ஹாசன் இணையும் புதிய கூட்டணி!

பீகார் மற்றும் ஜார்கண்ட் பழங்குடி மக்களுக்காக போராடிய முதல் வீரர் இவர்தான்.  இப்படம் குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளனர்.  மேலும் பிர்சாவின் வாழ்க்கை முறையை கண்டறிய ஜார்கண்ட் மற்றும் வங்காளத்தில் படக் குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.  இப்படத்தின் காட்சிகள் திரையில் இதுவரை பார்த்திடாதவாறு பிரம்மிப்பூட்டும் வகையில், பசுமையான மற்றும் அழகான காடுகளுக்கு இடையில் படம் உருவாக்கப்பட இருக்கிறது என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஆர்யா நடிப்பில் 'சார்பாட்டா பரம்பரை', கார்த்தி நடிப்பில் 'மெட்ராஸ்', ரஜினிகாந்த் நடித்த 'காலா' மற்றும் 'கபாலி' போன்ற படங்கள் மூலம் அதிக பாராட்டை பெற்றவர் இயக்குனர் பா.ரஞ்சித்.  தற்போது 'பிர்சா' என்கிற படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர இருக்கிறார்.  இதுகுறித்து பா.ரஞ்சித் கூறுகையில், 'இதுபோன்ற ஒரு சிறந்த படத்தை முதன்முதலாக நான் ஹிந்தியில் இயக்கப்போகிறேன்.  படத்தின் ஸ்க்ரிப்ட் தான் மென்மேலும் ஒரு படத்திற்க்கு உயிரோட்டத்தை கொடுத்து செழுமையாக்கும், நான் ஸ்க்ரிப்டை தயார் செய்யும் வரை பொறுமை காத்த தயாரிப்பாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  பிர்சாவின் வாழ்க்கை மற்றும் சுதந்திர போராட்டம் இவற்றை கண்டு நான் உந்துதல் அடைந்துள்ளேன்.  இந்த படத்தை உருவாக்குதல் எனக்கு மிகுந்த சந்தோசம்' என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | விக்ரமுடன் கூட்டணி சேர்ந்த இயக்குனர் ரஞ்சித்! அரசியல் படமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News