கர்ப்பிணி மனைவியை இழுத்துச் சென்ற கணவர், விளக்கும் தந்த நடிகை
கர்ப்பமாக இருக்கும் நடிகை சனா கானை அவரது கணவர் வேகமாக இழுத்துச் சென்ற வீடியோ வேகமாகப் பரவி வந்த நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சனா கான் விளம்பரப் படங்களில் நடித்துத் தொடங்கி பின்னர் திரைத்துறைக்கு வந்தார். அவர் தென்னிந்தியத் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சில திரைப்படங்களில் சிறப்புத் தோற்றமாக நடனக் காட்சிகளில் மட்டும் நடித்துள்ள இவர், சில தொலைக்காட்சி மெய் நிகழ்வுத் தெடார்களிலும் தோன்றியுள்ளார். இவர் 5 மொழிகளைச் சார்ந்த 14 திரைப்படங்களிலும், 50 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் நடிகை சனா கான் முதல் முறையாக சிம்புவின் சிலம்பாட்டம் படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் பயணம், தம்பிக்கு எந்த ஊரு, ஆயிரம் விளக்கு போன்ற படங்களில் நடித்திருந்தார். இதுதவிர இந்தி, தெலுங்கு படங்களில் சனா கான் நடித்திருக்கிறார். மேலும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு இறுதி நாள் வரை வந்து இரண்டாம் இடம் பிடித்தார்.
மேலும் படிக்க | ரஜினியின் கேரக்டர் சீக்ரெட்டை சொன்ன ஜெயிலர் பட நடிகர்... என்ன தெரியுமா?
நடிகை சனா கான் கடந்த 2020 ஆம் ஆண்டு முஃப்தி அனஸ் சயத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் இவர் திரைப்படங்கள் எதிலும் நடிக்கவில்லை. மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிஜாப் அணிந்த போட்டோவை பகிர்ந்திருக்கிறார். மேலும் தற்போது இவர் கர்ப்பமாக இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை சனாதானின் கணவர் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ மும்பையில் நடந்த இப்தார் விருந்தின் போது எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது இது குறித்து நடிகை சனாகான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர்
இந்த வீடியோ இப்போதுதான் எனது கவனத்திற்கு வந்தது. என் அன்பான சகோதர சகோதரிகள் எனக்கு ஆதரவாக தெரிவித்த கருத்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நாங்கள் எங்கள் கார் டிரைவர் தொடர்பை இழந்தோம், நான் வழக்கத்தைவிட நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததால் எனக்கு அசௌகரியமாக இருந்தது. அதனால்தான் என்னை எனது கணவர் இந்த விருந்து நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியே அழைத்துச் சென்றார்.
அதனால்தான் என்னை அவசர அவசரமாக எனது கணவர் என்னை அழைத்துச் சென்றார். மேலும் விருந்தினர்களின் நிகழ்ச்சியை நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்பதால் விரைவாக வெளியே சென்றோம் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | காதல் சுகுமார் இயக்கத்தில் நடிக்கப்போகும் காமெடி நடிகர்! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ