டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 'பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களிருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துகொண்டுள்ளனர். 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் நிரூப், தாமரை, வனிதா, ஜூலி, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி உள்ளிட்ட பல்வேறு போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வலிமை படத்துக்கு பிரபலங்களின் ரியாக்ஷன் என்ன?


பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், பிக்பாஸ் அல்டிமேட்டிலும் தொகுப்பாளராக களமிறங்கினார். ஆனால், விக்ரம் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதால் அவரால் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், இந்த நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகக்கூடும் என்ற தகவல்கள் வெளியான நிலையில், கடந்த வாரம் அந்த தகவலை உறுதி செய்தார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட கமல்ஹாசன், விக்ரம் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக பங்கேற்க வேண்டியிருப்பதால், பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 



இதனையடுத்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதனால், அவரே மீண்டும் தொகுப்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது. ஆனால், திடீரென நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், இன்று புதிய புரோமோ ஒன்றை வெளியிட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சிம்பு தொகுப்பாளராக களமிறங்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. புரோமோவில் இருக்கும் சிம்பு ‘ என்ன எதிர்பார்க்கல இல்ல, நானே எதிர்பார்க்கல’  என பஞ்ச் வசனத்தோடு கமல் மேடையில் மாநாடு போட இருப்பதை அறிவித்துள்ளார்.  



மேலும் படிக்க | த்ரிஷ்யம் கூட்டணியின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸ்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR