நடிகர், இயக்குநர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட டி ராஜேந்தர், உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு நாட்களுக்கும் மேலாக அவர் மருத்துவமனையில் இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும், அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவத் தொடங்கியது. இதனால் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல குடும்பத்தினர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சவ்ரவ் கங்குலி பயோபிக்: இயக்கப்போவது ரஜினியின் மகளா?!


இந்நிலையில், சமூகவலைதளங்களில் வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அவரது மகன் சிம்பு. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது தந்தையின் உடல் நிலை நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வயிற்றில் சிறிய ரத்தகசிவு இருப்பதால், வெளிநாடு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள சிம்பு, விரைவில் உடல் பிரச்சனைகளில் இருந்து மீண்டு ரசிகர்களை அவர் சந்திப்பார் எனத் தெரிவித்துள்ளார். 



’எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தை குறித்துத் தொடர்ந்து பரவும் வதந்திகள் எதையும் யாரும் நம்ப வேண்டாம்.என் தந்தை மிக நலமாக உள்ளார். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம்.



அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி'' என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | இணையத்தில் வைரலாகும் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் போஸ்ட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR