நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள ‘டான்’ திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸூக்கு தயாராக இருக்கிறது. நாளை படத்தின் டிரெய்லர் வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பை படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் டிவிட்டரில் தெரிவித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சங்கருக்கு முத்தம் கொடுத்து மைக் பஞ்சாயத்தை முடித்த பார்த்திபன் - வைரல் ட்வீட்


படம் சிறப்பாக வந்திருப்பதாக தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், டான் குறித்த முக்கியமான சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அறிமுக இயக்குநரான சிபிசக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தின் கதையை முதன்முதலாக சொல்லும்போது ஏற்றுக் கொள்ளவில்லையாம். கதை பிடித்திருந்தாலும், அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கதையில் சில  மாற்றங்களை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். அதேநேரத்தில் படத்தின் காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்ற தன்னுடைய கருத்துகள் எதையும் கூறவில்லையாம்.



சில மாற்றங்கள் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் அவர் தெரிவித்ததன் அடிப்படையில், மீண்டும் சில மாற்றங்களை செய்துள்ளார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. அதன்பிறகே படத்தின் சூட்டிங் தொடங்கியுள்ளது. அறிமுக இயக்குநராக இருந்தாலும், கதை சிறப்பாக இருந்ததால் தானே தயாரிக்க முடிவெடுத்ததாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். பட்ஜெட் அதிகம் என்பதால் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டியதாகவும், தன்னுடைய நம்பிக்கையின் காரணமாக படத்தை எடுத்து முடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.


இப்படத்தில் சூரி நீண்ட நாட்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார். சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கி உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். 


மேலும் படிக்க | சூர்யா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR