ஒரு வழியா தொப்பியை கழட்டிய சிவகார்த்திகேயன்.. புதிய லுக்கில் செம மாஸ்
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடியின் ரிஷப்சன் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் வாழ்த்து தெரிவிக்க வந்த சிவகார்த்திகேயனின் புதிய லுக் தான் டாக் ஆஃப் தி டவுனாக தற்போது உள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது அவரது 21வது படத்தில் நடித்து வருகிறார். எஸ்கே 21 (SK21) படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயனின் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.
அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டின் ரிஷப்சன்:
கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டிக்கு (Ashok Selvan and Keerthi Pandian) அருண்பாண்டியனின் பண்ணை வீட்டில் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இதையடுத்து இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ஒன்றாக வந்து மணமக்களை வாழ்த்தினர். மேலும், நடிகர்கள் சாந்தனு, ஹரீஷ் கல்யாண், ஆர்யா, கலையரசன் நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், ஜனனி, மஞ்சிமா மோகன் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | தன் மனைவியை கலாய்த்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த அசோக் செல்வன்!
சிவகார்த்திகேயனின் புதிய லுக்:
இந்நிலையில் தற்போது அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமண வரவேற்புக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) அவர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். அப்போது அங்கு அவர் புதிய மாஸ் லுக்கில் வந்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தொப்பி இல்லாமல் வந்த சிவகார்த்திகேயன் தான் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக உள்ளார். மேலும் இவரது புதிய லுக் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயனின் SK 21:
சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம், கடந்த ஜூலை மாதம் வெளியாகியிருந்தது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற மாவீரன், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மாஸ் காட்டியது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்தியேன் தற்போது SK 21 படத்தில் நடித்து வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வரும் SK 21 படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த இரு மாதங்களாக காஷ்மீரில் நடைபெற்றது. SK 21 படத்திற்காக சிவகார்த்திகேயன் கெட்டப் மாற்றி வித்தியாசமான லுக்கில் நடித்து வருகிறார். தனது ஹேர் ஸ்டைல் கூட தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, கேப் அணிந்தபடி வலம் வந்தார். இதனால், இதுவரை சிவகார்த்திகேயன் லுக் எப்படி இருக்கும் என்று அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டின் ரிஷப்சனில் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட போட்டோ ட்ரெண்டாகி வருகிறது. அதில் சிவகார்த்திகேயனின் லுக்கை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். மேலும் இதில் ஹாலிவுட் ஹீரோ ஸ்டைலும், பாலிவுட் ஹீரோ லுக்கும் கலந்த கலவையாக சிவகார்த்திகேயன் செம்ம ஸ்மார்ட்டாக உள்ளார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றது.
மேலும் படிக்க | “கருப்பா இருந்தா அழகில்லையா..?” அசோக் செல்வன் காரசார பேச்சு..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ