பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். 2002ல் விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.  அதன் பின்னர் 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் இமான். சிறந்த இசை இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருதை வென்ற ஐந்தாவது தமிழ் இசையமைப்பாளர் ஆவார். மேலும், 4 பிலிம்பேர் விருதுகள், 1 தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, 2 விஜய் விருதுகள், 1 எடிசன் விருது, 1 ஆனந்த விகடன் சினிமா விருது மற்றும் 1 ஜீ தமிழ் விருது ஆகியவற்றையும் வென்றுள்ளார். டி. இமான் கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் (2019) தமிழ் இருக்கைக்கான தூதராக நியமிக்கப்பட்டார்.  சிவகார்த்திகேயனின் ஆரம்ப காலகட்டத்தில் இமானின் பாடங்கள் பெரிதும் உறுதியாக இருந்தன.  அவரது வெற்றிக்கு இமானின் பங்கும் முக்கியமான ஒன்று.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து வெளியேறியவுடன் பவா செல்லதுரை போட்ட முதல் போஸ்ட்..!


மனம் கொத்தி பறவை, ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், நம்ம வீட்டு பிள்ளை, சீமா ராஜா என சிவகார்த்திகேயனின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்தார் டி இமான். ஆனால் சமீப காலங்களாக அவரது படங்களில் இசையமைப்பதை தவிர்த்து வந்தார் டி இமான், இதற்கான காரணங்கள் எதுவும் பொது வழியில் இல்லாத நிலையில் சமீபத்திய நேர்காணலில் இது குறித்து பேசி உள்ள டி இமான், இந்த ஜென்மத்தில் இனி சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று பேசி உள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகத்தை மன்னிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். இது ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அனைவருக்கும் ஒரு பிடித்த ஹீரோவாக இருந்து வரும் நிலையில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சிவகார்த்திகேயன் உடன் ஏன் இனி பணியாற்ற மாட்டேன் என்ற காரணத்தை இமான் தெளிவாக கூறவில்லை என்றாலும் தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அதனை சொல்ல மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.  இந்த சம்பவத்தை வைத்து சிவகார்த்திகேயன் இமானுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இமானுக்கும்  அவரது முதல் மனைவிக்கும் விவாகரத்து ஆனது, இதற்கு காரணமும் சிவகார்த்திகேயன் தான் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.  இருப்பினும் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து இது குறித்து எதுவும் கூறப்படவில்லை.


இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவி மோனிக்கா ரிச்சர்டை கிட்டத்தட்ட 13 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2020ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.  கணினி பொறியாளர் மோனிக்காவை ஏப்ரல் 2008ல் திருமணம் செய்து கொண்டார் இமான், அவர்களுக்கு வெரோனிகா டோரதி இமான் மற்றும் பிளெசிகா கேத்தி இமான் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து செல்ல முடிவு செய்தனர்.  பின்பு, மறைந்த கோலிவுட் கலை இயக்குனர் உபால்டின் மகள் அமேலியை 2022ம் ஆண்டு டி இமான் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். 


மேலும் படிக்க | லால் சலாம் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ