டான் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படம் மே 13ஆம் தேதி வெளியாக உள்ளது.
அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் அடுத்த படமான டான் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி சிவாங்கி, ஆர்ஜே விஜய், எஸ் ஜே சூர்யா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | 'டான்' படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல தொலைக்காட்சி!
முன்னதாக டான் திரைப்படம் மார்ச் மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. பின்னர் இதே தேதியில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவான RRR படமும் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. இதனால் டான் படம் சொன்ன தேதியில் வெளியாகுமா அல்லது வேறு சில தேதிகளில் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகமால் இருந்தது.
சிறிது தினங்களுக்கு முன்னர் டான் திரைப்படம் மே மாதம் 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்தியை வெளியிட்டுள்ளது. டான் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய திரையுலகில் மிகப்பெரிய இயக்குனர் ராஜமவுலி அவர்கள் இயக்கத்தில் RRR திரைப்படம் மார்ச் 25 ஆம் தேதி வெளிவர இருக்கிறது, அதே தேதியில் சிவகார்த்திகேயன் நடித்த டான் படமும் வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள RRR திரைப்படம் வெளியாவதை கருத்தில்கொண்டு, டான் ரிலீஸ் தேதியை மாற்றுவதற்கு ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். டான் படம் வருகின்ற மே 13ம் தேதி உலகமெங்கும் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளது.
தற்போது டான் படத்தின் வெளியீடு தேதி அதிகாரபூர்வமாக வெளியானதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர், இருப்பினும் இரண்டு மாத காலங்கள் ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. முன்னதாக டான் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ளதாகவும், ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் தளம் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. கடந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தையும் மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா சூழ்நிலை காரணமாக அக்டோபர் மாதம் வெளியானது. தற்போது டான் படமும் மார்ச்சிலிருந்து மே மாதத்திற்கு தள்ளிபோய் உள்ளது.
மேலும் படிக்க | 'SK20'-ல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக RRR நடிகை?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR