சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம், விரைவில் வெளியாகவுள்ளதை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாவது பாடலின் அப்டேட் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டாவது சிங்கிள்:


மாவீரன் படத்தின் இரண்டாவது பாடலுக்கான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. “வண்ணாரப்பேட்டையில..” எனத்தொடங்கும் இப்பாடலை, சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.



வரும் ஜூன் 14ஆம் தேதி வண்ணாரப்பேட்டையிலே பாடல் வெளியாகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 2ஆம் தேதி நடைபெற உள்ளது. 


”வண்ணாரப்பேட்டையில..”


சிவகார்த்திகேயன் பாடியுள்ள, வண்ணாரப்பேட்டையில என்ற இந்த பாடல் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகவுள்ளது. இதுகுறித்து இன்று வெளியாகியுள்ள இந்த வீடியோ, மாவீரன் படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் பரத் ஷங்கர் ஆகியோர் பேசிக்கொண்டிருப்பது போல தொடங்குகிறது. படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு டூயட் பாடல் பாட, ஆட்கள் தேடுவது போலவும் பின்னர் படத்தின் ஹீரோவான சிவகார்த்திகேயனுக்கு போன் செய்வது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சிவகார்த்திகேயன் ஸ்டுடியோவிற்கு வர, பின்னாடியே படத்தின் நாயகி அதிதி சங்கர் வருகிறார். “சித் ஸ்ரீராம் வர்ரத்தா சொன்னீங்க..” என ஏமாற்றமாக அத்தி கேட்க..”ஸ்ரேயா கோஷல் வரலையே..” என காமெடியாக கேட்கிறார், சிவகார்த்திகேயன். இருவரும் அடித்துக்கொள்வதை நிறுத்திவிட்டு ஒரூ வழியாக பாடுகின்றனர். இந்த பாடலை கேட்க, சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் இன்னும் இரண்டு நாட்கள் காத்துக்கிடக்க வேண்டும். 


மேலும் படிக்க | Sonam Kapoor: 13 வயதில் பாலியல் கொடுமையை அனுபவித்த பிரபல நடிகை..!


நீண்ட நாட்களுக்கு பிறகு அப்டேட்..!


சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் ரிலீஸ் பணிகள் இடையில் தடைப்பட்டு போனது. அதன் பணிகள் மீண்டும் தொடங்கிய நிலையில், மாவீரன் படமும் ரிலீஸிற்கு ரெடியாக நிற்கிறது. இதையடுத்து, அயலான் படத்தின் போஸ்டர்களும் அப்டேட்ஸ்களும் தொடர்ந்து வர, மாவீரன் படத்தின் அப்டேட்ஸ்கள் மிகவும் குறைந்து போயின. இந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்னர் மாவீரன் படத்தின் முதல் சிங்கிளான “சீன் ஆ சீன் ஆ..” என்ற பாடல் வெளியானது. இது, தற்போது வரை பல மில்லியன் வியூஸ்களை கடந்து ரசிகர்கள் கவர்ந்துள்ளது. இரண்டாவது பாடலின் அப்டேட் இன்று வெளியானதால், சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளனர். 


விரைவில் இசை வெளியீட்டு விழா..


மாவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் ஜூலை மாதம் 2ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. பிரபல தனியார் கல்லூரியான சாய் ராம் என்ஜினியரிங் கல்லூரியில் இவ்விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படம், ஆகஸ்டு மாதம் 11ஆம் தேதிதான் ரிலீஸாக இருந்தது. ஆனால், ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ஆகஸ்டு 10ஆம் தேதி வெளியாவதால் மாவீரன் ரிலீஸை படக்குழு  மாற்றியுள்ளது. ஜூலை, 14ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.


மேலும் படிக்க | அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் க்ரைம் த்ரில்லர் “போர் தோழில்” வசூல் எவ்வளவு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ