இணையத்தில் கடந்த 4-5 நாட்களாக #Sivakarthikeyan, #DImman ஆகிய ஹேஷ்டேக்குள் தொடர்ந்து ட்ரெண்டிங்கிள் உள்ளன. காரணம், சில நாட்களுக்கு முன்னர் டி.இமான் ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் சிவகார்த்திகேயன் குறித்து பேசிய விஷயங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டி.இமான்-சிவகார்த்திகேயன் படங்கள்:


தமிழ் திரையுலகை பொறுத்தவரை, ஒரு சில நடிகர்களுக்கு அவர்களின் படத்தில் பணிபுரியும் கலைஞர்களுடன் நல்ல நட்பு இருக்கும் அந்த நட்பு, அவர்களின் திரை வாழ்க்கை முழுவதும் கூட தொடரும். அப்படி மிகவும் நட்புடன் பழகிய இரண்டு கலைஞர்கள் டி.இமான் மற்றும் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான ‘மனம் கொத்தி பறவை’ படத்திற்காக இசையமைத்திருந்தார் டி.இமான். அடுத்து வெளியான சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை, சீமராஜா உள்ளிட்ட படங்களுக்கு டி.இமான் இசையமைப்பாளராக இருந்துள்ளார். 


ஒன்றாக பணிபுரிவதை தாண்டி, இவர்கள் குடும்ப நண்பர்கள் போலவே பழகியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து படங்களில் பணிபுரிவதை நிறுத்தி விட்டனர். இதற்கிடையில்தான் 2020ஆம் ஆண்டு டி.இமானின் விவாகரத்து குறித்த செய்தி வெளியானது. இவரது முன்னாள் மனைவியின் பெயர், மோனிகா ரிச்சர்ட். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இசையமைப்பாளர் டி.இமான், 2022ஆம் ஆண்டு அமலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


மேலும் படிக்க | சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகம்! முதன் முறையாக பேசிய டி இமான்!


டி.இமான் கொடுத்த நேர்காணல்..


இமான், சமீபத்தில் ஒரு ஊடக சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் “சிவகார்த்திகேயனும் நீங்களும் ஏன் ஒன்றாக இணைந்து படம் நடிப்பதில்லை” என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இமான், தனக்கு சிவகார்த்திகேயன் பெரிய துரோகம் செய்து விட்டதாகவும் இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து படம் பண்ண முடியாது என்றும் கூறினார். இது குறித்து அவரிடம் கேள்வி கேட்டதாகவும், அதற்கு அவர் கூறிய பதிலை தன்னால் கூற முடியாது என்றும் கூறினார் இமான். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர், இது அவரது விவாகரத்து குறித்த விஷயமாக இருக்கும் என்று கருதினர். 


என்ன பிரச்சனை?


டி.இமான் இவ்வாறு பேட்டியளித்ததை தொடர்ந்து அவரது முன்னாள் மனைவி இது குறித்து ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அவர், தனக்கும் டி.இமானிற்கும் பிரச்சனை எழுந்த போது சிவகார்த்திகேயன் சமாதானம் செய்து தங்களை சேர்த்து வைக்க முயற்சித்ததாக கூறியுள்ளார். இந்த பிரச்சனையில் தனக்கு ஆதரவளிக்குமாறு டி.இமான் சிவகார்த்திகேயனிடம் கேட்டதாகவும் அவர் அதற்கு ஒத்துழைக்காதததால் இமான் அதை துராேகம் என்று குறிப்பிடுவதாகவும் கூறியுள்ளார். இதை ரசிகர்கள் பலர், தவறாக புரிந்து கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


மார்கெட் இழக்கும் சிவகார்த்திகேயன்?


கோலிவுட்டில் உள்ள நடிகர்கள் வளர ஆரம்பித்து விட்டாலே, ஒரு சில பெரிய நடிகர்கள் திட்டம் போட்டு அவர்களை அழிக்க முயற்சிப்பர் என்று கூறப்படுகிறது. 80களில் பிரபல ஹீரோவாக இருந்தவர் மைக் மோகன். இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்த நிலையில், அப்போது முன்னணி ஹீரோக்களாக இருந்த சிலர் “மைக் மோகனுக்கு எய்ட்ஸ்” என்ற வதந்தியை பரப்பிவிட்டு அவருக்கு பட வாய்ப்புகள் வர விடாமல் செய்ததாக கிசுகிசுக்கப்படுகிறது. இதே போன்ற “டி.இமான் முன்னாள் மனைவிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பு” என்ற வதந்தியை பரப்பிவிட்டு அவரது மார்கெட்டை காலி செய்ய முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்த பிரச்சனையால் அவரது அடுத்தடுத்த பட ரிலீஸ்களில் பிரச்சனை வரலாம் என்றும் பேசப்படுகிறது. 


மேலும் படிக்க | டி.இமான் விவாகரத்துக்கு SK தான் காரணமா...? முழு பின்னணி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ