நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள டான் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரு மாதங்களுக்கு முன்பே வெளியாகவேண்டிய இப்படம் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெளியீட்டால் தள்ளிப்போடப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்‌ஷன் மற்றும் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 


காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், மெசேஜ் என ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸாக வெளிவந்துள்ள இப்படம் தமிழகத்தில் சுமார் 600க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் சுமார் 900 திரையரங்குகளில் டான் வெளியாகியுள்ளது. 


                                                                


இந்த நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி முதல் நாளில் சுமார் 13 கோடியை இப்படம் நெருங்கியுள்ளதாம். சிவகார்த்திகேயன் கரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் எனும் சாதனையைப் பெற்றது கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான சீமராஜாதான்.


 இயக்குநர் பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் அதற்கு முன்பு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்கள் ஹிட் ஆனதால் சீமராஜாவுக்கு ஏகபோக எதிர்பார்ப்பு இருந்தது அந்த அடிப்படையிலேயே அதன் முதல் நாள் வசூல் பிரம்மாண்டமாக இருந்தது.


                                                         


அந்த வகையில் அது சுமார் 13 கோடிக்கும் அதிகமாக முதல் நாளில் வசூல் குவித்திருந்தது. எனவே டான் படம் இந்தப் பட்டியலில் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக நடந்த டான் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இப்படத்தின் தமிழக விநியோகஸ்தரான உதயநிதி, இந்தப் படம் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான டாக்டரைவிட பெரிய ஹிட்டாகும் எனத் தெரிவித்திருந்தார்.


மேலும் படிக்க | பள்ளித் தேர்வில் ‘RRR’ படம் பற்றிக் கேள்வி- வைரலாகும் கொஸ்டின் பேப்பர்!


 


டான் முதல் நாள் வசூலைப் பொறுத்தவரை உதயநிதி சொன்னது கிட்டத்தட்ட நடந்தேவிட்டது எனலாம். படம் குறித்துப் பொதுவாக நல்ல விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. அத்துடன் வார விடுமுறை மற்றும் கோடை தொடர் விடுமுறையும் உள்ளதால் இப்படம் வசூலில் மேலும் பல புதிய சாதனைகளைப் படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது!


மேலும் படிக்க | ‘Marvel’ லெவலில் உருவாகும் ‘KGF 3’ - உலகையே அதிரவைக்கும் புதிய அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR