பிரேக் எடுக்க போகிறேன்..சிவகார்த்திகேயன் ட்வீட், ரசிகர்கள் அதிர்ச்சி
சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகவும் இனி இந்த பக்கம் அவரது குழு கையாளவுள்ளதாகவும் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்து அனைவருக்கும் நன்கு தெரியும், எவ்வித திரை பின்புலமும் இல்லாமல் சின்னத்திரையிலிருந்து வந்து தற்போது வெள்ளித்திரையில் தடம் பதித்து ஜொலித்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் பெரும்பாலான குழந்தைகளால் ரசிக்கப்படுகிறது, இவரது நகைச்சுவையான பேச்சிற்கே பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படம் வெளியாகவுள்ளது. 'மண்டேலா' படத்தின் மூலம் பிரபலமான மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். சுனில், மிஸ்கின், கவுண்டமணி, யோகி பாபு போன்ற பலர் நடித்திருக்கும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மறுபுறம் அவருடைய இன்னொரு படமான ‘அயலான்’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை R. ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார், அதே நேரத்தில் படத்தில் நகைச்சுவையான வேற்றுகிரகவாசி கதாபாத்திரமும் உள்ளது. அயலான் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் அயலான் வெளியாக இருக்கிறது.
மேலும் படிக்க | உயிர் உங்களுடையது தேவி... குந்தவை எனும் ஐயன் லேடி - மறக்க கூடாத சோழர் குல இளவரசி!
இந்த ஆண்டு தொடர்ந்து பேக் டூ பேக் முக்கிய திரைப்படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென அவர் ட்விட்டர் கணக்கில் இருந்து சில காலம் விலகி இருக்க முடிவு செய்திருப்பதாகவும் சில மாதம் கழித்து மீண்டும் வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் “எனது அன்புக்குரிய சகோதர சகோதரிகளே.. நான் சிறிது நாள் ட்விட்டரில் இருந்து விலகுகிறேன்.. உங்களை பார்த்து கொள்ளுங்கள்.. நான் விரைவில் வருவேன்.. அனைத்து அப்டேட்டுகளும் எனது குழுவினர் உங்களுக்கு தெரிவிப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது சிவகார்த்திகேயன் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களின் ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் ‘SK21’ என்றழைக்கப்படும் படத்தில் நடித்து வருகிறார். ராணுவ களத்தை கதைக்களமாக கொண்ட இப்படத்தினை இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். விரைவில் இப்படம் குறித்த பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் படிக்க | நாளை அஜித்தின் ஏகே 62 அறிவிப்பு? டைட்டில் இது தானா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ