சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் "டான்". இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி, ஷிவாங்கி, பால சரவணன், ஆர்.ஜே விஜய் மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து SK புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையும் விஷால்!


இப்படம் கல்லூரி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.  டாக்டர் பட வெற்றியை தொடர்ந்து இப்படத்தில் சிவகார்த்திகேயன்- பிரியங்கா மோகன் ஜோடி ரசிகர்களிடம் அதிகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த மாதம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  



இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி கொண்டிருக்கிறது.  படத்தின் அப்டேட்டு குறித்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று(16/12/2021) மாலை 6 மணியளவில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.


 



அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு அனிருத் இசையில் "ஜலபுலஜங்" என்ற குத்து பாடல் வெளியானது.  இப்பாடலுக்கு ரோகேஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.  கல்லூரி மாணவர்களுக்கு டெடிகேட் செய்யும் விதமாக இப்பாடல் கலர்புல்லாக அமைந்துள்ளது.  அதிகபட்ச இளைஞர்கள் அடிக்கடி முணுமுணுக்கும் 'அமுக்கு டுமுக்கு அமால் டுமால்' என்ற டயலாக் மூலம் இப்பாடல் ஆரம்பமாகிறது.  டான் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


ALSO READ | குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கும் தேதி அறிவிப்பு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR