சமீப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படங்களில் சிவகார்த்திகேயனின் 'டான்' படமும் ஒன்றாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'டான்' படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பை சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) 2021 பிப்ரவரி மாதத்தில் கோவையில் முடித்தார். இரண்டாவது கட்டம் மார்ச் மாதத்தில் துவங்கவிருந்த நிலையில், தற்போதைய ஊரடங்கு உத்தரவு காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.


இந்த நிலையில், வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல் இந்த படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் அட்லீயுடன் துணை இயக்குனராக பணியாற்றிய அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்குகிறார்.


இந்த படம் ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கல்லூரி சூழலின் பின்னணியில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோரது கதாப்பாத்திரங்களைச் சுற்றி கதைக்களம் இருக்கும். இந்த படத்தில் சூரி மற்றும் சிவா இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ: டாக்டர் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்; படக்குழு முக்கிய முடிவு


சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த படம் மூலம் சிவகார்த்திகேயனுடன் ராக்ஸ்டார் அனிருத் (Anirudh) ஏழாவது முறையாக இணைந்துள்ளார். 


ALSO READ: Valimai Update: தல அஜித் ரசிகர்களுக்கு விரைவில் இரட்டை மகிழ்ச்சி, மாஸ் அப்டேட் இதோ



சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பாலா சரவணன், காளி வெங்கட் மற்றும் இன்னும் சில நடிகர்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.


இதற்கிடையில், நெவல்சன் திலிப்குமார் இயக்கும் 'டாக்டர்' (Doctor) படத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து காணப்படுவார்.


ALSO READ: Hansika-வின் ‘மஹா’படத்துடைய தெறிக்கவிடும் திகில் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR