Hansika-வின் ‘மஹா’படத்துடைய தெறிக்கவிடும் திகில் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனது

தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ள மகா படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. இதை நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.

Last Updated : Jul 2, 2021, 09:23 PM IST
  • வெளியானது மகா பட ட்ரெய்லர்.
  • சிவகார்த்திகேயன் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்.
  • பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தில் சிம்புவையும் ஹன்சிகாவையும் ஒன்றாக திரையில் காணலாம்.
Hansika-வின் ‘மஹா’படத்துடைய தெறிக்கவிடும் திகில் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனது title=

தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ள மகா படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. பல வருடங்களுக்குப் பிறகு ஹன்சிகாவும் சிம்புவும் இப்படத்தில் ஒன்றாக காணப்படுவார்கள். இந்த படத்தில் சிம்பு ஒரு சிறிய ஆனால் முக்கியமான கதாபாத்திரத்தில் காணப்படுவார்.

மகா படத்தின் ட்ரெய்லர் இந்த படம் ஒரு தீவிர த்ரில்லர் படமாக இருக்கும் என்பதை தெளிவாக்குகிறது.

மகா படத்தைப் பற்றி ரசிகர்கள் அதிக ஆர்வத்தில் உள்ள இந்த நேரத்தில் படத்தின் தயாரிப்பாளர்கள் இப்போது டிரெய்லரை வெளியிட்டனர். இதை நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) பகிர்ந்துள்ளார்.

அதைப் பகிர்ந்த அவர், “மகா பட டிரெய்லரை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மகா படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

அறிமுக திரைப்பட தயாரிப்பாளர் யு.ஆர்.ஜமீல் இயக்கிய மகா படத்தில் பெரிய திரையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சிம்புவும் (Simbu) கன்சிகாவும் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு வெளியான வாலு படத்திற்குப் பிறகு இருவரையும் தற்போது ஒரே படத்தில் காணலாம்.

ALSO READ: Valimai Update: தல அஜித் ரசிகர்களுக்கு விரைவில் இரட்டை மகிழ்ச்சி, மாஸ் அப்டேட் இதோ

இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். எஸ்.டி.ஆர் மற்றும் ஹன்சிகாவைத் தவிர, பிரபல மாடலும் நடிகையுமான சனம் ஷெட்டியும் மகா படத்தில் ஒரு முக்கிய துணை வேடத்தில் நடிக்கிறார். இப்படம் ஒரு த்ரில்லர் படம் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மகா ஹன்சிகாவின் (Hansika) 50 ஆவது மற்றும் இசையமைப்பாளர் கிப்ரானின் 25 ஆவது படமாகும். தம்பி ராமையா, கருணாகரன், நாசர் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இப்போதைக்கு, இப்படத்தின் வெளியீட்டு தேதி தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதை எதிர்பார்க்கலாம் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீப காலங்களில் கோலிவுட் படங்களில் மகா மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. இந்த படம் கடந்த கோடையில் வெளியிடப்படவிருந்தது. இருப்பினும், கொரோனா தொற்று காரணமாக வெளியீடு தாமதமானது. படத்தை நேரடியாக OTT தளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ALSO READ: Rajinikanth: 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி ரிலீஸ்; படக்குழு அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News