சங்கர் இயக்கத்தில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யா..!
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் ஆர்.சி 15 திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டைரக்டராக இருந்து நடிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு, மாநாடு திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைத்தது. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் கேரக்டர் பெரும் வரவேற்பை பெற்றதுடன், அவரது நடிப்புக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் திரைத்துறையைச் சேர்ந்த பல உட்ச நட்சத்திரங்கள் அவரை பாராட்டினர். சிம்புவுக்கு மட்டுமில்லாமல் எஸ்.ஜே சூர்யாவுக்கும் கம்பேக் மூவியாக மாநாடு அமைந்ததால், அந்தப் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
மேலும் படிக்க | BMW பைக் வாங்கிய வெற்றிமாறன்! விலை இவ்வளவா?
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடிக்கும் வாய்ப்பும் எஸ்.ஜே.சூர்யாவைத் தேடி வருகிறது. இப்போது இயக்குநர் சங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகிவரும் RC 15 படத்தில் நடிக்கும் வாய்ப்பு எஸ்.ஜே சூர்யாவுக்கு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வில்லனாக நடிக்க அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
மாநாடு படத்துக்குப் பிறகு சம்பளத்தை உயர்த்திய எஸ்.ஜே.சூர்யா, இந்தப் படத்துக்கு எவ்வளவு ஊதியமாக பெறப்போகிறார் என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு RC15 படத்தின் அறிவிப்பை இயக்குநர் சங்கர் பிரம்மாண்டமாக அறிவித்தார். கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுமார் 170 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் தயாராகிறது.
மேலும் படிக்க | 3 ஹீரோயின்களுடன் விஜய்சேதுபதி ரொமான்ஸ்? விக்ரம் அப்டேட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR