லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் விக்ரம். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் விஜய்சேதுபதி. படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடக்கிறது. கடந்த வாரம் படக்குழுவுடன் இணைந்த விஜய் சேதுபதி, தன்னுடைய காட்சிகளை ஒரே ஷெட்யூலாக நடித்து கொடுக்க உள்ளாராம். இந்நிலையில், விக்ரம் படம் குறித்து லேட்டஸ்டாக வெளியாகியுள்ள தகவல்களின்படி, வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு மூன்று பேர் ஜோடியாக நடிக்கிறார்களாம்.
மேலும் படிக்க | விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் படப்பிடிப்பு நிறைவு
மைனா நந்தினி, ஷிவானி நாராயணன், விஜே காயத்திரி ஆகியோர் விஜய் சேதுபதிக்கு ஜோடி என கூறப்படுகிறது. விஜே மகேஷ்வரியும் படத்தில் நடிப்பதால், காயத்திரி பதிலாக விஜே மகேஷ்வரி ஜோடியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. அப்படியிருந்தால், காயத்திரி பகத்பாசிலுக்கு ஜோடியாக நடிக்கலாம். எப்படியிருந்தாலும் விஜய் சேதுபதிக்கு 3 ஹீரோயின்கள் ஜோடி என்ற தகவலில் மாற்றமில்லை. கொரோனா காரணமாக தடைபட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறுகிறது. கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத்பாசில் ஆகியோரைத் தவிர நரேன், காளிதாஸ், ஜெயராம் உள்ளிட்டோரும் விக்ரம் படத்தில் நடிக்கின்றனர்.
இம்மாதத்தக்குள் சூட்டிங் நிறைவு செய்து, கோடை விருந்தாக மே கடைசியில் விக்ரம் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது படக்குழுவின் திட்டம். ஏற்கனவே கமல்ஹாசன் பிறந்நாளையொட்டி வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிடவும் படக்குழு தயாராகி வருகிறது. இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் ஆர் மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
மேலும் படிக்க | அப்படி ஒரு ஆடை அணிந்து ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்த மல்லிகா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR