ஸ்ருதி ஹாசன் கலாச்சாரம், ஃபேஷன்ம் பிரத்யேகமான படங்கள் மற்றும் அழகான புன்னகை ஆகியவற்றிற்காக அறியப்படுகிறார். ஆன்லைனில் அவ்வப்போது பல புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார் நடிகை ஸ்ருதி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்ருதியின் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஸ்ருதி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி, தனது ரசிகர்களுடன் பழகுவதை விரும்புகிறார்.


அதுமட்டுமல்ல, தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்கிறார். ஸ்ருதி ஹாசன் கடந்த சில நாட்களாக டூடுல் கலைஞர் சாந்தனுவுடன் டேட்டிங் செய்து வருகிறார். அவர்களின் சமீபத்திய சமூக ஊடக PDA இதயங்களை வென்று வருகிறது. ஸ்ருதி அழகான ஸ்லிப் உடையில் ஓரிரு படங்களை ஆன்லைனில் பகிர்ந்துள்ளார். 




இந்த வைரல் புகைப்படத்தில் சோபாவில் படுத்துக் கொண்டு அவர் போஸ் கொடுப்பதைக் காணலாம். இந்த லுக், அனைவருக்கும் மிகவும் பிடித்தமான லுக்காக மாறியிருக்கிறது.


ஸ்ருதியின் இந்த அழமான புகைப்படத்திற்கு பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தாலும், அவரது காதலரின் பதிவு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.


அதிலும் சாந்தனுவின் கருத்து என்ன என்பதை தெரிந்துக் கொள்வதிலும் ரசிகர்கள் ஆவல் காட்டுகின்றன. 


மேலும் படிக்க | ரசிகர்களின் அன்புக்குரிய ஸ்ருதி ஹாசன்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்


"நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்" ஸ்ருதி என்ற சாந்தனுவின் அன்பான டிவிட்டர் பாராட்டுக்கு ஆசையுடன் பதிலளித்திருக்கிறார் ஸ்ருதி கமலஹாசன்.


சாந்தனுவின் வாழ்த்துக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். "அழகான படங்கள்... அற்புதமாக தோற்றமளிக்கும் ஸ்ருதி... முற்றிலும் பிரமிக்க வைக்கும் மயக்கும் அழகு! அற்புதமான அதிர்ச்சியூட்டும் அழகான ஸ்ருதி..." என்று ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். 


"இந்த வாழ்க்கையில் நான் மூன்று பேரை நேசிக்கிறேன். அது யார் தெரியுமா? ஸ்ருதி... நீங்கள் தான்... நீங்கள்... நீங்கள்... நீங்கள்..." என்று மற்றொரு ரசிகர் எழுதினார்.


மேலும் படிக்க | மகிழ்ச்சியாக இருக்க பல காரணங்கள் சொல்லும் ஸ்ருதி கமலஹாசன்!


சாந்தனு ஹசாரிகாவும் ஸ்ருதியும் தங்கள் உறவுக்கு யாரும் எந்தவொரு முத்திரையும் குத்துவதைத் தவிர்க்கின்றனர். ஒருவர் மீது மற்றொருவர் அன்பைப் பொழிகிறார்கள். ஸ்ருதி தன்னைப் புகழ்வது தனக்கு உத்வேகம் அளிப்பதாக சாந்தனு தெஇவித்துள்ளார். 


அதை ஒரு பதிவில் தெரிவித்த சாந்தனு, "ஸ்ருதி என்னை பல வழிகளில் ஊக்கப்படுத்தியுள்ளார். உண்மையில், நாங்கள் மிகவும் ஊக்கமளிக்கும் ஜோடி.


எங்கள் வாழ்க்கையில் நிறைய விஷயங்களால், நாங்கள் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்ப்பட்டோம். எனக்கு இப்படி ஒரு துணை இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவரது சொந்த களத்தில் சமமாக ஆக்கப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாக அவர் செயல்படுகிறார். உங்கள் துணையுடன் இந்த வகையான பந்தம் இருப்பது ஒரு கலைஞராக எனக்கு  மிகவும் ஊக்கமளிக்கிறது,' என்று சாந்தனு தெரிவித்துள்ளார்.


வேலையில், ஸ்ருதி பிரபாஸுடன் சலார் மற்றும் NBK107 படங்களில் நடிக்கிறார்.  


மேலும் படிக்க | தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஜான் அமலன் தேர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR