சூர்யா, கீர்த்தி சுரேஷ், சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, செந்தில் உட்பட பலர் நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ‘நானும் ரவுடிதான் பட ஹிட்டுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஆக்‌ஷன் காமெடி படமான இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இசையமைப்பாளரான அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலின் டீஸர் வெளியிடப்பட்டது. மணி அமுதவன், விக்னேஷ் சிவன் இணைந்து எழுதியுள்ள இந்தப் பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ளார்.


தற்போது ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலின் டீஸரை இதுவரை 1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதை சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். 


பாடல் டீஸர்: சொடக்கு மேல சொடக்கு போட்டார் சூர்யா!


அதேபோல  ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஃபஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் டீஸர் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் பொங்கலுக்கு வெளிவருகிறது.


‘தானா சேர்ந்த கூட்டம்’ : 2வது லுக் வெளியீடு- ரசிகர்கள் ஹாப்பி!!