சென்னையில் நடைபெற்ற 'கடைசி காதல் கதை' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இந்த விழாவில் கடைசி காதல் கதை திரைப்படத்தின் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.  இந்த விழாவில் பேசிய பாக்யராஜ் கொரோனாவிற்கு பிறகு தியேட்டர் திறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். ஆனால், இப்போது சில படங்கள் பார்த்த பின்பு தியேட்டர் திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது. நல்ல படங்களை வரவேற்கலாம். ஆனால் தவறான உதாரணங்கள் கொண்ட படங்களை வரவேற்கிறோம் என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. பொது நல வழக்கு போடும் அளவிற்கு மன உளைச்சலாக இருக்கிறது என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இப்படத்தின் இயக்குனர் ஆர். கே. வித்யாதரன் பேசும்போது, கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு இந்த படம் ட்ரைலர் வெளியீட்டிற்கு வந்துள்ளது.  என்னுடைய முதல் கன்னட படத்தை 19 நாட்களில் முடித்தேன். சத்யா ராஜ் சாருடன் நிறைய கதை பண்ணிருக்கேன். அடுத்ததாக நிறைய கதை சிபிக்கும் வைத்திருக்கிறேன். அவர் சத்யராஜின் நகல். நான் ஒரு 1415 கதையை புத்தகத்தில் வைத்திருக்கிறேன். அதில் 141 ஆவது கதை மற்றும் 231ஆவது கதைக்கும் அட்வான்ஸ் வாங்கி அது சில காரணத்தால் எடுக்க முடியவில்லை. கடைசி காதல் கதை 531 ஆவது கதை தான். இந்த படத்தையும் 19 நாட்களில் எடுத்திருக்கிறேன். இந்த படத்தில், ஜாதி மதம், பெண்களின் பிரச்னை அனைத்தும் சர்ச்சைக்குரியதாக இருக்கும். படத்தின் ஹீரோ ஏற்கனவே பாலா இயக்கிய வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்.  இந்த படத்தை வெகுவிரைவில் வெளியிட உள்ளோம் என்றார்.


ALSO READ | அண்ண யாரு தளபதி! ட்விட்டரில் முதலிடம் பிடித்த விஜய்!


நடிகர் சிபிராஜ் பேசும்போது,  தமிழ் சினிமா நல்ல தரத்தில் இருக்கிறது. படத்தின் கதை நன்றாக இருந்தால் தியேட்டரிலும் சரி, ஓடிடி-தளத்திலும் சரி நல்ல வரவேற்பு உள்ளது. இப்படத்தின் இயக்குனரை நீண்ட காலமாக தெரியும். எனக்கு கதை ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் முதலில் ஞாபகம் வருவது RKV தான். அப்பாவும் இவரை தான் சொல்லுவார் என்றார்.  இயக்குனர் சீனு ராமசாமி பேசும்போது, படத்தின் டிசைன் வேறு ஒரு தோற்றத்தில் இருந்தது. கன்னடம், தமிழ் இரண்டிலும் அவர் ஒரு நல்ல கதை மாந்தர். அவருக்கு சினிமா மீதுள்ள விருப்பம் தான் புது முக நடிகர்களை வைத்து எடுப்பதற்கான தைரியத்தைக் கொடுத்துள்ளது.  


கதாநாயகன் ஆகாஷ் பிரேம் குமார் பேசும்போது,  இது நான் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம். என் மீது நம்பிக்கை வைத்த அப்பா அம்மாக்கு நன்றி. என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றிவிட்டேன். எனது தந்தை கடைசியாக தியேட்டரில் பார்த்த படம் கே.எஸ்.ரவிக்குமார்-ன் பஞ்சதந்திரம், ரவிக்குமாரின் நடிப்பும் இயக்கமும் பிடிக்கும் என்று இங்கு பதிவு செய்கிறேன்.  இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது,  ஆர்.கே.வி. சிறந்த நடிகரும் மற்றும் இவர் ஓரு கால் நடை மருத்துவரும் கூட. கன்னடம் தெரியாவிட்டாலும் அவரின் திறமையால் வாய்ப்பு வாங்கி விடுவார்.  படத்தில் நடித்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றிபெற வாழ்துகிறேன் என்றார்.


ALSO READ | 2021-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR