கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றால் விதிக்கப்பட்ட லாக்டவுனின் போது, புலம்பெயர்ந்தோர் தங்கள் வீடுகளை அடைய உதவியதற்காக அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சோனு சூத். பொதுமக்களுக்கும் உதவி செய்த பிரபல வில்லன் நடிகர் சோனு சூத் (Sonu Sood) அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். 


ALSO READ: Video: பொதுத்தேர்வை ரத்து செய்ய சோனு சூத் வலியுறுத்தல்!


நடிகர் சோனு சூத் கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல் பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் அவர் பொது மக்களுக்கு உதவி செய்வது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார். 


இந்நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் சோனு சூத் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாகவும் அவருக்கு பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இது குறித்துக் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது., சோதினை: COVID-19 நெகட்டிவ் என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அவர் சில நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.


 



கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி  கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR