நடிகர் அஜித்திற்கு மூளையில் கட்டியா...? அறுவை சிகிச்சை முடிந்தது? - பரபரப்பு தகவல்கள்!
Actor Ajith Kumar Health Update: சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் அஜித்குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Actor Ajith Kumar Health Update: சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு நடிகர் அஜித் குமார் இன்று வருகை தந்தார். தொடர்ந்து, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் அஜித் குமார் மருத்துவமனை வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தற்போது அவருக்கு மூளைப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் சிறிய கட்டி இருந்ததாகவும், அதனை நான்கு மணிநேர அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அதனை வெற்றிகரமாக அகற்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளா, மதுரை ஆகிய இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களால் நடிகர் அஜித் குமாருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மூளைப்பகுதியில் 'ஸ்டன்ட்' அதாவது 'ஸ்கிரீன்' வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு அஜித் குமாரை நலம் விசாரித்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அஜித் குமாரின் மருத்துவ சிகிச்சை குறித்தோ, உடல்நிலை குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி ஊடகங்களில் இதுகுறித்து செய்திகள் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் சற்று பரபரப்பு நிலவி வருகிறது. மேலும், நடிகர் அஜித் குமார் விரைவில் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் எனவும் ரசிகர்கள் சிலரின் வேண்டுதல்களும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் துணிவு திரைப்படம் வெளியானது. அதன்பின், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் திரைப்படம் நடிக்க ஒப்பந்தமானார் அஜித் குமார். முதலில் விக்னேஷ் சிவனின் திரைப்படத்தில் நடிக்க இருந்த நிலையில், சில காரணங்களால் விக்னேஷ் சிவன் அதில் இருந்து விலகினார்.
அதை தொடர்ந்து, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டது. தொடர்ந்து நீண்ட நாள்களாக படம் குறித்த எந்த அப்டேட்டும் வராத நிலையில், ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். சமீபத்தில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி உயிரிழந்ததை தொடர்ந்து, அவருக்கு நடிகர் அஜித் குமார் அஞ்சலி செலுத்த வந்திருந்தார். வெற்றி துரைசாமியும், நடிகர் அஜித் குமாரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.
நடிகர் அஜித் குமார் அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வது போன்ற வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இருப்பினும், Zee News அதனை உறுதி செய்யவில்லை. குறிப்பாக, தற்போது வெளியாகி உள்ள அறுவை சிகிச்சை குறித்த இந்த தகவல்களையும் Zee News உறுதி செய்யவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ