6 டன் பாறையில் பாடகர் எஸ்.பி.பியின் உருவம் பொறிப்பு!
புதுவையில் 6 டன் எடையுள்ள பாறையைக் குடைந்து, மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்மின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 2020-ல் தன்னுடைய 74ஆம் வயதில் காலமானார். அவருக்குச் சொந்தமாக காஞ்சிபுரம் அருகில் உள்ள ராணிபேட்டை மாவட்டம், தாமரைப்பாக்கம், சர்வேஸ்வரா நகரில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில், எஸ்பிபியின் உடல் அந்த பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும் அந்த வீட்டில் எஸ்பிபியின் நினைவு இல்லத்தை அவரது மகன் எஸ்பிபி சரண் உருவாக்கி வருகிறார். கடந்த 1 வருடமாக நடந்து வந்த இந்த பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.
மேலும் படிக்க | 'விஜய்' படத்தைத் தட்டித் தூக்கிய அனிருத்! - #Exclusive!
இதற்கிடையில், அந்த நினைவிடத்தை அலங்கரிப்பதற்கான சிலைகள், புதுச்சேரி ஆரோவில், சஞ்சீவி நகர் பகுதியில் உள்ள சிற்பக்கூடத்தில் சிற்பி கருணாகரன் குமார் என்பவரின் தலைமையில் 6 சிற்பிகள் இதை உருவாகி வருகின்றன.
அந்த அழகிய வடிவமைப்பின் ஒரு பகுதியாக, ஒரு பாறையைக் குடைந்து எஸ்பிபியின் முகத்தை வடிவமைத்துள்ளனர்.
அவரது முகம் பொறிக்கப்பட்ட அந்த பாறையானது சுமார் 6 டன் எடை கொண்டதாகும். அவரது உருவத்தின் அருகில் அவரது கையெழுத்து, அவர் அடிக்கடி உச்சரிக்கும், ‘சர்வே ஜனாஸ்ஸு; ஜனா பவந்து; ஸர்வேசு ஜனா சுகினோ பவன்’ என்ற மந்திரத்தையும் செதுக்கியுள்ளனர்.
இந்த மந்திரத்தின் அர்த்தம் ‘அனைவரும் மகிழ்ச்சியாக நோயின்றி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்; அனைவருக்கும் சுபம் விளைய வேண்டும்; ஒருவர் கூட துயரம் அடையக்கூடாது” என்பதே ஆகும்.
வடிவமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று மாலை கிரேன் மூலம் வாகனத்தில் ஏற்றப்பட்ட எஸ்பிபியின் முகம் பொறிக்கப்பட்ட பாறை, தாமரைப்பாக்கத்திற்கு அனுப்பப்பட்டது. பின்னர் நினைவில்லத்தில் அந்த பாறையை பொருத்தும் பணிகள் நடைபெற்றன.
மேலும் படிக்க | விஜய்யின் ‘பீஸ்ட்’டில் கை வைத்த உதயநிதி! - என்ன ஆச்சாம்?!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR