சென்னை: பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யம்  (SP Balasubramaniam) கொரோனா வைரஸுக்கு எதிர்மறையாக பரிசோதித்துள்ளதாகவும் தற்போது அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும் காலை முதல் சமூக ஊடகங்களில் பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும், இது குறித்து, எஸ்.பி.பி சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனையோ அல்லது அவரது மகன் எஸ்.பி. சரணோ (SP Charan) எதையும் கூறாமல் இருந்தனர். எஸ்.பி.பி-யின் உடல் நிலை குறித்து சரண் தினமும் மக்களுக்கு தன் வீடியோக்கள் மூலம் தெரியபடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், தற்போது சரண் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வதந்திகளை நம்ப வேண்டாம் என மகக்ளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


தான் தினமும் மருத்துவர்களுடன் ஆலோசித்த பிறகு எஸ்பிபி குறித்த புதுப்பிப்புகளை பகிர்ந்து கொள்வதாகவும், அதற்கு முன்னர் யாரும் எந்த தவறான, ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்களை பகிர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



எஸ்.பி.பாலசுப்ரமண்யம் சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ஆகஸ்ட் 5 ஆம் தேதி அவரது COVID-19 சோதனைகள் நேர்மறையாக வந்தன. அவருக்கு கொரோனா வைரஸின் லேசான அறிகுறிகள் இருந்தன. ஆனால் அவரது நிலை பின்னர் மோசமடைந்தது.


ALSO READ: SPB-யின் உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்ட மகன்... தற்போதைய நிலை என்ன? 


 அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, எஸ்.பி.பி தனது சமூக ஊடகங்களில் தனது தொற்றைப் பற்றி உறுதிப்படுத்தும் வீடியோவைப் பகிர்ந்தார். தனக்கு COVID-19 இன் லேசான அறிகுறிகள் இருப்பதாகக் கூறிய அவர், தனது குடும்பத்துக்கு தொற்று பரவாமல் தடுக்கவும், ஓய்வெடுத்து நல்ல முறையில் குணவடையுமே தான் மருத்துவமனையில் சேர முடிவு செய்ததாகக் கூறினார்.


74 வயதான மூத்த பாடகரான எஸ்.பி.பி 16 க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பல தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


எஸ்பிபி விரைவில் குணமடைய திரைப்பட பிரபலங்கள் உட்பட பலதரப்பட்ட மக்களும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.


ALSO READ: 'பாடும் நிலா... எழுந்து வா' SPB-ஐ அழைக்கும் Super Star! ரசிகர்களிடம் பிரார்த்திக்குமாறு வேண்டுகோள்!!


எஸ்பி பாலசுப்பிரமண்யம் பின்னணி பாடகராக மட்டுமல்லாமல், இசையமைப்பாளர், நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், திரைப்பட தயாரிப்பாளர் என பல பணிகளை செவ்வனே செய்துள்ள சகல கலா வல்லவன் ஆவார். குறிப்பாக, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் இவர் அதிக பங்களிப்பை அளித்துள்ளார்.