அமெரிக்காவில் எஸ்.பி.பி பாஸ்போர்ட் திருட்டு!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவரது பை திருடு போனதாக கூறப்படுகிறது. அந்த பையில், அவரது பாஸ்போர்ட், வங்கி கடன் அட்டை, பணம், பாடல் இசை குறிப்பு ஆகியவை இருந்ததாக தெரிகிறது.
பாஸ்போர்ட் திருடு போனது குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடனடியாக இந்திய தூதரகத்தில் புகார் அளித்தார். அதையடுத்து அவருக்கு உடனடியாக மாற்று பாஸ்போர்ட் வாங்கப்பட்டது. இதற்காக இந்திய தூதரகத்துக்கு தனது முகநூல் பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நன்றி தெரிவித்துள்ளார்.