பெப்சி, கோக் குடிப்பதில்லை- ஏ.ஆர்.முருகதாஸ்
கோக், பெப்சி உள்ளிட்ட அன்னிய நாட்டு குளிர்பானங்கள் குடிப்பதை 3 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: கோக், பெப்சி உள்ளிட்ட அன்னிய நாட்டு குளிர்பானங்கள் குடிப்பதை 3 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோக் மற்றும் பெப்சி குடிப்பதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே மார்ச் 1-ம் தேதி முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு பானங்கள் குடிப்பதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டேன் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்:-
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கத்தி படத்திற்கான கதையை எழுதும் போதே கோக், பெப்சி போன்ற அந்நிய நாட்டு பானங்களை குடிப்பதை நிறுத்திவிட்டேன். படப்பிடிபிலும் அந்நிய நாட்டு பானங்களை பயன்படுத்த தடை செய்துள்ளேன்."என தெரிவித்துள்ளார்.