தவிர்க்க முடியாத தனிப் பெருங்கலைஞன்- # HBD கவுண்டமணி!
அதிகாரவர்க்கத்தைத் தனது படங்களில் தோலுரிக்கவும் தவறியதில்லை நடிகர் கவுண்டமணி. நகைச்சுவையில் அவரது பாணியே தனிதான்.
தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்து போயிருக்கிறார்கள். அதில் விரல்விட்டு எண்ணக் கூடிய வெகு சிலர்தான் காலங்கள் கடந்தும் மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்து வருகின்றனர். அதில் முக்கியமான ஒரு பெயர் கவுண்டமணி!
1960களிலேயே அவர் சினிமாவுக்கு நடிக்கவந்துவிட்டாலும் அவர் உச்சம் தொட்டது என்னவோ 1980களில்தான். தொடக்கத்தில் சிறிய வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது அவர் பெயரைக் கூட திரையில் போடமாட்டார்கள். ஆனால் பின்னொரு காலத்திலோ அவர் பெயரைப் போட்டாலே அந்தப் படம் ஓடிவிடும் என தயாரிப்பாளர்கள் நினைக்கும் நிலையை தனது அசாத்தியமான உழைப்பால் உருவாக்கிக் காட்டியவர் கவுண்டமணி.
அதிகாரவர்க்கத்தைத் தோலுரிப்பதாக இருந்தாலும் சரி; மோசமான அரசியல்வாதிகளை துவைத்துக் கட்டுவதாக இருந்தாலும் சரி, நகைச்சுவையில் கவுண்டமணியின் பாணியே தனிதான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் சாதியவாதத்துக்கு எதிராகவும் தனது கருத்துகளைப் படங்களில் விதைக்கவும் அவர் தவறியதில்லை.
அதேநேரம், காமெடி எனும் பெயரில் உருவ கேலியைப் பரவலாக்கியது, வயதில் மூத்தவர்களை இழிவுபடுத்துவது, எளிய மனிதர்களைக் கிண்டலடிப்பது என மக்களிடையே கவுண்டமணிமீது சில விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. ஆனால் அதற்காக கவுண்டமணியை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கவும் முடியாது. அதுதான் கவுண்டமணி!
கவுண்டமணி என்கிற பெயரைச் சொல்லும்போது கண்டிப்பாக செந்திலைப் பற்றி சொல்லாமல் இருக்கவே முடியாது. தமிழ் சினிமாவில் இருவரும் சேர்ந்து செய்த அலப்பறை காலத்தால் அழியாதவை. இன்னும்கூட வீடுகளில் அவர்கள் நடித்த காட்சி டிவியில் வந்தால் ரிமோட்டைத் தேடாமல் குலுங்கிச் சிரிக்கும் மக்களே அதற்குச் சாட்சி!
படங்களில் உடன் நடிக்கும் பெரிய ஹீரோக்களைக் கேலி செய்ய நகைச்சுவை நடிகர்கள் பொதுவாகத் தயக்கம் காட்டுவதுண்டு; கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள். ஆனால் அந்தக் கதையெல்லாம் இவரிடம் இருக்காது. எவ்வளவு பெரிய ஹீரோவானாலும் சரி வகை தொகை இல்லாமல் தனது கவுன்ட்டர்களால் வைத்து செய்துவிடுவார் கவுண்டமணி.
ஆனால் அந்த பெரிய நடிகர்களோ அல்லது அவர்களது ரசிகர்களோ அதைப் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவே மாட்டார்கள். மாறாக, அதனை ரசிக்கவே செய்வார்கள். காரணம், ஆடியன்ஸ் மட்டுமல்ல; அந்த நடிகர்களேகூட கவுண்டமணிக்கு ரசிகர்களாக இருப்பதுதான். அந்த அளவுக்குத் தனது ஆளுமையைத் அவர் தெளிவாகவும் ஸ்திரமாகவும் வகுத்துவைத்திருந்தார்.
மேலும் படிக்க | நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் இன்று! ஒரு பார்வை!
கவுண்டமணி சினிமாவில் தற்போது பெரிதாக ஆக்டிவாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது பாணியைப் பிரதி எடுத்துத்தான் இன்று பலர் காமெடி செய்துவருகின்றனர். இத்தனை சிறப்புகளுக்கும் உரிய கவுண்டமணிக்கு இன்று பிறந்தநாள். காலம் கடந்தும் நிற்கும் காமெடிகளை கடல்போல வாரி வழங்கிய அவருக்கு வாழ்த்துகள்!
மேலும் படிக்க | ‘DON’ இத்தனை கோடி வசூலா! - படக்குழுவே வெளியிட்ட புதிய தகவல் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR