பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகி வரும் படம் தான் 'மாமன்னன்'.  ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.  மேலும் படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் பாசில், வடிவேலு போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உதயநிதி முழுநேர அரசியல்வாதியாக செயல்பட்டு வந்தாலும், தான் முன்னர் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.  தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பல வெற்றி படங்களை தயாரித்து இருக்கிறார், அதன்பின்னர் கதாநாயகனாக தனது பயணத்தை தொடங்கி குறுகிய காலத்தில் பிரபலமான தயாரிப்பாளராகவும், நடிகராகவும் உயர்ந்து இருக்கிறார்.  கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' எனும் நகைச்சுவை கலந்த காதல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. இதையடுத்து இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், நிமிர், சைக்கோ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து அசத்தினார். 


மேலும் படிக்க | புது மாஸ் அப்டேட்…மீண்டும் இணையும் ஜெயம் ரவி - கார்த்தி


இந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கு 'மாமன்னன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி  தற்போது ‘மாமன்னன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த போஸ்டரில் உதயநிதிஸ்டாலின் கையில் கத்தியும், வடிவேலு கையில் துப்பாக்கியும் உள்ளது, இதனால் வடிவேலுக்கு கதையில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பது தெரிய வருகிறது. அத்துடன் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.



'மாமன்னன்' படத்தின் முழு படப்பிடிப்பையும் சில மாதங்களுக்கு முன்னரே படக்குழு முழுமையாக முடிந்துவிட்டது.  தற்போது படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பணிகளை விரைவில் முடித்துவிட்டு, படத்தை ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி வெளியிட ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. '


முன்னதாக மாமன்னன் படம் பற்றி செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய படத்தை, அரசியலைப் புரிந்து கொண்டு அதற்கு ஆதரவாக பேசுவதாகவும் பயணிப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் வடிவேலுவை வேறு ஒரு தளத்தில் காண்பிக்க முயற்சித்துள்ளதாகவும், தமிழ் ரசிகர்களுக்கு இது சர்ப்ரைஸாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை, அவர் ஒரு ஜீரோ! வெளுத்து வாங்கிய அமைச்சர் ரோஜா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ