விமானியை மணக்கிறார் சுப்பிரமணியபுரம் புகழ் சுவாதி!
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ்-ஐ திருனமணம் செய்கிறார் சுப்பிரமணியபுரம் புகழ் சுவாதி!
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ்-ஐ திருனமணம் செய்கிறார் சுப்பிரமணியபுரம் புகழ் சுவாதி!
தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளரான சுவாதி, தமிழ் திரையுலகிற்கு சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. இப்படத்தில் அவரது நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை இடித்தவர் இவர். மேலும், இப்படத்தின் பாடலான கண்கள் இரண்டால் என்ற பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது. இளம் காதலர்களை கவர்ந்த பாடலாக திகழ்ந்தது.
இதனைத்தொடர்ந்து போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள சுவாதிக்கு, இந்த ஆண்டு படங்கள் இல்லை. புதுமுக கதாநாயகிகள் அதிகம் வந்ததால் போட்டி ஏற்பட்டு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால் சுவாதிக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும், சுவாதிக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இவர்களது திருணமத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, சுவாதி - விகாஸ் திருமணம் வருகிற 30 ஆம் தேதி ஐதராபாத்தில் நடக்க இருக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை செப்டம்பர் 2 ஆம் தேதி கொச்சியில் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.
விகாஸ் இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தாவில் வசிக்கிறார். திருமணத்துக்கு பிறகு சுவாதி கணவருடன் ஜகார்த்தாவில் குடியேறவிருப்பதாக கூறப்படுகிறது.