மீண்டும் வெடித்தது ‘இந்தி சர்ச்சை’! - பின்னணியில் KGF-2
சில நாட்களாக ஓய்ந்திருந்த இந்தி சர்ச்சை தற்போது மீண்டும் வெடித்துள்ளது.
‘இந்தி’ விவகாரம் அரசியல் வட்டாரம் மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்திலும் சர்ச்சையாவது வாடிக்கையாக இருந்துவருகிறது.
சில நாட்களாக ஓய்ந்திருந்த இவ்விவகாரம் தற்போது மீண்டும் வெடித்துள்ளது. இம்முறை இந்தச் சர்ச்சை வெடித்துள்ளது நம் கோலிவுட்டில் அல்ல பக்கத்து ஏரியாவான சாண்டல்வுட்டில். ‘நான் ஈ’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கன்னட நடிகரான கிச்சா சுதீப், சில தினங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, கேஜிஎஃப்-2 படம் தொடர்பாகப் பேசுகையில், இந்திப் படங்கள் தென் இந்திய வர்த்தகத்தைக் கவரும் விதமாக தென்னிந்திய மொழிகளில் அதிக அளவில் டப்பிங் செய்யப்பட்டுவருவதாகக் கூறினார். இந்தி தேசிய மொழி அல்ல எனவும் அவர் அப்போது தெரிவித்திருந்தார். இந்த விவகாரம்தான் இத்தனை சர்ச்சைக்கும் மூலகாரணமாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க | விஜய்க்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாமாம்- காரணம் என்னனு பாருங்க!
சுதீப்பின் அந்தக் கருத்துக்குப் பாலிவுட் நடிகரும் அண்மையில் வெளியான தெலுங்குப் படமான ஆர்.ஆர்.ஆரில் நடித்திருந்தவருமான அஜய் தேவ்கன் காட்டமாகக் கேள்வி எழுப்பி இருந்தார். அதில், “இந்தி தேசிய மொழி இல்லை என்கிறீர்கள். எனில், உங்களது தாய்மொழிப் படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அத்துடன் இந்திதான் எப்போதும் தேசிய மொழியாக இருக்கும் எனக் கூறியுள்ள அஜய் தேவ்கன், ஜன கன மன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் இத்துடன் முடியாமல் அடுத்தடுத்தும் தங்களது கருத்துகளை இருவரும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்தி குறித்த இருவருக்கும் இடையேயான வார்த்தைப் போர் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.
மேலும் படிக்க | ரஜினியின் இடத்தில் விஜய்- பின்னணியில் கமல்ஹாசன்?! கசிந்த புதிய தகவல் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR