நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளதாக  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை சன் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெறி, மெர்சல் என அடுத்தடுத்து மாபெரும் வெற்றியை கொடுத்த விஜய்-அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. பெயரிடப்படதாக விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63 ’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார் என ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.



விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தற்போது பிரசாத் லேப், தனியார் கல்லூரி என சென்னையின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்துக்கு விஜய் வரும் போது ரசிகர்களால் எடுக்கப்படும் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடைபெறும் வேலையில் தற்போது இத்திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையினை சன் டிவி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.