தன்னைவிட வயதில் குறைவான ஆணை திருமணம் செய்யும் சூப்பர் சிங்கர் பிரபலம்!
பிரபல தனியார் தொலைகாட்சியில் பல சீசன்களாக ஒளிபரப்பாகும் பிரம்மாண்ட நிகழ்ச்சி தான் `சூப்பர் சிங்கர்`.
பிரபல தனியார் தொலைகாட்சியில் பல சீசன்களாக ஒளிபரப்பாகும் பிரம்மாண்ட நிகழ்ச்சி தான் 'சூப்பர் சிங்கர்'. இந்த நிகழ்ச்சிக்கென்றே தனியென ரசாகர் பட்டாளம் உள்ளது. இதில் பங்குபெறும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதன் மூலம் பிரலமான பவரும் தற்போது திரைப்படங்களில் பிண்ணனி பாடகர்களாகவும் ,பாடகிகளாகவும் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் புகழ் பெற்றவர் தான் மாளவிகா. இவர் 'மனம் கொத்தி பறவை' படத்தில் வரும் 'டங் டங்' என்ற பாடலை பாடி பிரபலமானார். அவ்வப்போது சில பல பாடல்களை பாடி அதனை இன்ஸ்டாவில் பதிவேற்றுவார். தனது பாடல் திறமையால் அனைவரையும் தன்வசமாக்கி கொண்டவர்.
இந்நிலையில் இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த தகவலை அவரே சமுக வலைதளம் வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்தார்.இந்த சந்தோஷமான செய்திக்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து கூறி வந்தனர். தனது வருங்கால கணவருடன் இவர் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அடிக்கபடி சமுக வலைதளத்தில் பகிர்ந்து வருவார்.மேலும் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கும் பதிலளித்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் மாளவிகா ரசிகர்ளுடன் வீடியோ சாட் செய்துள்ளார்.அப்போது அதில் ஒரு ரசிகர் உங்களது கணவர் உங்களை விட வயது குறைவானவரா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மாளவிகா,"ஆம்,என்னை விட அவர் ஒரு வயது இளையவர் அவருக்கு 32 வயது ஆகிறது.மேலும் திருமணம் செய்ய பெண்ணை விட பையன் வயது அதிகமாக தான் இருக்க வேண்டும் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை அது ஒரு பிரச்சினை இல்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் காதலிக்க வேண்டும் மரியாதை கொடுக்க வேண்டும் அவ்வளவுதான்.எனக்கு அவரை பிடித்திருக்கிறது,அதுமட்டுமல்லாது நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். ஒருபுறம் இதனை ஆதரித்து சிலரும்,மறுபுறம் இதனை வசைபாடியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ பழங்குடியின மக்களின் நலனுக்காக ரூ.1 கோடி வழங்கிய நடிகர் சூர்யா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR