பழங்குடியின மக்களின் நலனுக்காக ரூ.1 கோடி வழங்கிய நடிகர் சூர்யா!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் பழங்குடியின மக்களின் நலனுக்காக ரூ.1 கோடி வழங்கினார் சூர்யா  

Written by - ZEE Bureau | Last Updated : Nov 1, 2021, 02:20 PM IST
பழங்குடியின மக்களின் நலனுக்காக ரூ.1 கோடி வழங்கிய நடிகர் சூர்யா!

சென்னை : த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'.அமேசான் ப்ரைம் OTT தளத்தில் நாளை (அக்டோபர்-2 ) வெளியாக இருக்கிறது.  இந்த படத்தில் பழங்குடி இருளர் இன மக்கள் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்து எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. 2D  நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் காட்சிகள் சிலவற்றை படக்குழு திரையிட்டு வருகிறது.  இந்த படத்திற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

இந்நிலையில் முதல்வரை சந்தித்த படக்குழு இந்தப் படத்தை அவருக்கென்று பிரத்யேகமாக திரையிட்டுக் காட்டினர். அதனை கண்டு மகிழ்ந்த முதல்வரும் படக்குழுவினருக்கு அவரது பாராட்டுக்களை தெரிவித்தார்.  இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா - சூர்யாவின் 2D  நிறுவனம் சார்பில் ரூ. 1 கோடியினை நடிகர் சூர்யா வழங்கினார்.இதனை ஓய்வு பெற்ற நீதிபதி சந்தரு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க  பொறுப்பாளர்கள் பெற்று கொண்டனர்.

நடிகர் சூர்யாவின் இந்த முயற்சிக்குப் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தினை அவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து, நடிகர் சூர்யாவிற்கு புகழாரம் சூட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ பிரமாண்டம்! 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News