விருமன் மதுர வீரன் பாடலை முதலில் பாடியது ராஜலட்சுமியா? கிளம்பும் புதிய சர்ச்சை!
`விருமன்` படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து அதிதி ஷங்கர் பாடிய `மதுரவீரன்` என தொடங்கும் பாடல் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
தமிழ் சினிமாவிற்கு புது வரவாக வந்துள்ள இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் பல திறமைகளை கைவசம் வைத்துள்ளார் என்று அவரை பலரும் புகழ்ந்து வருகின்றனர். அதுமட்டுள்ளது தமிழ் சினிமாவுக்கு சரளமாக தமிழ் பேசும் இளம் கதாநாயகி கிடைத்துவிட்டார் என்றும் ரசிகர்கள் பெருமைப்பட்டு வருகின்றனர். தற்போது இணையதள பக்கங்கள் முழுவதும் அதிதியின் பேட்டிகளும், புகைப்படங்களும் தான் நிரம்பி கிடக்கின்றன. இவர் முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் 'விருமன்' படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்குள் அடியெடுத்து வைக்கிறார். நடிப்பு மட்டுமின்றி இந்த படத்தில் அவர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து 'மதுரவீரன்' என தொடங்கும் பாடலையும் பாடியுள்ளார், இந்த பாடல் ரசிகர்களால் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதிதிக்கு படத்தில் பாடுவது முதல் தடவையல்ல, ஏற்கனவே தெலுங்கில் தமன் இசையமைப்பில் ஒரு ரொமான்டிக் பாடலை பாடியுள்ளார் அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விருமன் படத்தில் அதிதி பாடிய பாடல் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அதாவது இந்த பாடலை முதலில் பாடியது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கிராமிய பாடகி ராஜலட்சுமி தான், ஆனால் படக்குழு இறுதியில் ராஜலட்சுமியின் குரலை நீக்கிவிட்டு அதிதியை பாட வைத்திருப்பதாக தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பல மேடை நிகழ்ச்சிகளில் பாடிய ராஜலட்சுமி-செந்தில் கணேஷ் ஜோடிக்கு அங்கீகாரம் கொடுத்தது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, இந்நிகழ்ச்சிக்கு பிறகு அவர்களுக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இவர் 'விஸ்வாசம்' படத்தில் 'டங்கா டங்கா பாடல், சார்லி சாப்ளின்-2 படத்தில் 'சின்ன மச்சான்' பாடல், அசுரன் படத்தில் 'கத்தரி பூவழகி' மற்றும் சமீபத்தில் வெளியான 'புஷ்பா' படத்தில் 'சாமி சாமி' போன்ற பாடல்களை பாடி பிரபலமானார். இவர் பாடிய அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
மேலும் படிக்க | விருமன் பஞ்சாயத்து ஓவர் - வருத்தம் தெரிவித்தார் பாடலாசிரியர் சினேகன்
ஆனால் தற்போது 'விருமன்' படத்தில் இவரது குரலை நீக்கியது, இயக்குனர் மகளை பாட வைக்க வேண்டும் என்பதற்காகவா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதேபோல அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருந்த 'பிகில்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'வெறித்தனம்' பாடலை முதலில் பாடியது ராஜலட்சுமியின் கணவரும், சூப்பர் சிங்கர்-6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருமான செந்தில் கணேஷ் தானாம். ஆனால் இறுதியில் படக்குழு அவர் பாடியதை நீக்கிவிட்டு நடிகர் விஜய்யை பாட வைத்தார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 14 வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாகும் த்ரிஷா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ