புதுடில்லி: தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கு திரை உலகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல ரசிகர்களைக் கொண்டுள்ள அல்லு அர்ஜுன் (Allu Arjun) புதன்கிழமை (ஏப்ரல் 28) தனது ட்விட்டர் கணக்கில் தனது ரசிகர்களுடன் இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.


"அனைவருக்கும் வணக்கம்! எனக்கு கொரோனா தொற்று (Coronavirus) உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பு கொண்டவர் தங்களை சோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் நன்றாக இருப்பதால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று எனது நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் ”என்று 38 வயதான அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் கணக்கில் எழுதியுள்ளார். 



ALSO READ: கொரோனாவில் இருந்து மீண்டார் நடிகர் சோனு சூத்!


இரண்டாவது COVID-19 அலை இந்தியாவைத் தாக்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றின் எண்ணிக்கையில் அதிவேக உயர்வு ஏற்பட்டுள்ளது. வைரஸின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாறுபாடுகள் முதல் வகையை விட மிகவும் ஆபத்தானதாகவும் எளிதாக பரவும் வகையிலும் உள்ளன. 


பல்வேறு பாலிவுட் மற்றும் பிராந்திய திரைப்படத் துறை பிரபலங்கள் கடந்த காலங்களில் COVID தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமா துறை மட்டுமல்லாது, விளையாட்டுத் துறையிலும் பல பிரபலங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதைக் கண்டு வருகிறோம். 


2020 ஆம் ஆண்டில் நடிகை பூஜா ஹெக்டேவுடன் நடிகர் அல்லு அர்ஜுன் கடைசியாக திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் ஆக்ஷன்-டிராமா படமான 'அல வைகுந்தபுரமுலோ'வில் நடித்தார். அடுத்ததாக சுகுமார் இயக்கிய' புஷ்பா 'என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் அவர் காணப்படுவார். இப்படம் ஆகஸ்ட் 13 அன்று வெளியிடப்படவுள்ளது.


இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கின்றது. தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துண்டே உள்ளது. 


புதன்கிழமை (ஏப்ரல் 28, 2021) வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, நாட்டில் கோவிட் -19 காரணமாக ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 3,000-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,60,960 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,79,97,267 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ: HBD Sachin: கொரோனாவிலிருந்து குணமடைந்த சச்சின் பிளாஸ்மா தானம் செய்யப்போவதாகக் கூறியுள்ளார்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR