HBD Sachin: கொரோனாவிலிருந்து குணமடைந்த சச்சின் பிளாஸ்மா தானம் செய்யப்போவதாகக் கூறியுள்ளார்

சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 48 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தான் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், பிளாஸ்மா தானம் செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 24, 2021, 05:02 PM IST
  • சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 48 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
  • கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சச்சின் இப்போது முழுமையாக குணமடைந்துவிட்டார்.
  • பிளாஸ்மா தானம் செய்யப்போவதாக சச்சின் கூறியுள்ளார்.
HBD Sachin: கொரோனாவிலிருந்து குணமடைந்த சச்சின் பிளாஸ்மா தானம் செய்யப்போவதாகக் கூறியுள்ளார் title=

மும்பை: கொரோனா தொற்று பாரபட்சமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரையும் தொற்று விட்டுவைக்கவில்லை. 

சில நாட்களுக்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டார். அதற்குப்பிறகு அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர், முன்னெச்சரிக்கையாக சச்சின் சில நாட்களுக்கு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். இப்போது சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டார். 

இன்று சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாள்

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் (Sachin Tendulkar) பிறந்தநாள் இன்று. அவரது ரசிகர்களும் பல பிரபலங்களும் காலை முதல் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து குணமானார் சச்சின் 

சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 48 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தான் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், பிளாஸ்மா தானம் செய்ய தனது உடல் தகுதி பெற்றவுடன் தான் பிளாஸ்மா தானம் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

சச்சின் டெண்டுல்கர் தனது செய்தியில், 'உங்கள் வேண்டுதல்கள் மற்றும் வாழ்த்துகள், என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சிகிச்சை ஆகியவை என்னை நேர்மறையான சிந்தனைகளுடன் இருக்க வைத்தன. இவைதான் நான் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைய உதவின. உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி" என்று எழுதியுள்ளார். 

ALSO READ: மாஸ்டர் பிளாஸ்டர் Sachin Tendulkar-க்கு கொரோனா தொற்று: ட்விட்டர் மூலம் செய்தியை பகிர்ந்தார்

சச்சின் பிளாஸ்மா தானம் செய்வார்

தனது ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட வீடியோவில், சச்சின், "டாக்டர்கள் என்னிடம் சொன்ன ஒரு செய்தியை நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் பிளாஸ்மா நன்கொடை மையத்தை திறந்து வைத்தேன். சரியான நேரத்தில் பிளாஸ்மா (Plasma) வழங்கப்பட்டால், நோயாளி விரைவாக குணமடைய முடியும் என்று மருத்துவர்கள் என் மூலம் செய்தி அனுப்பியுள்ளனர்" என்று கூறியுள்ளார். 

"என் உடலுக்கு இந்த தானம் செய்வதற்கான தகுதி வந்தவுடன் நான் பிளாஸ்மா தானம் செய்வேன். எனது மருத்துவர்களிடம் பேசிவிட்டு இது குறித்து நான் முடிவு செய்வேன்" என்று சச்சின் மேலும் தெரிவித்துள்ளார். 

டெண்டுல்கர் ஏப்ரல் 8 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, அதன் பிறகு வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தார். பிளாஸ்மா நன்கொடையாளருக்கு தானம் செய்வதற்கு 14 நாட்கள் வரை எந்த அறிகுறிகளும் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர், கோவிட் -19 இலிருந்து குணமானவர்கள் பிளாஸ்மா தானம் செய்து மற்றவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். அவர் கூறுகையில், "கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் உங்கள் மருத்துவர்களை அணுகுங்கள். பிளாஸ்மா தானம் செய்வதற்கான தகுதி உங்களுக்கு இருந்தால், கண்டிப்பாக தானம் செய்யுங்கள். இதனால் பலருக்கு நிவாரணம் கிடைக்கும்" என்றார். 

டெண்டுல்கர் மேலும் கூறுகையில், "நாம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், நமது குடும்பத்தினரும் நண்பர்களும் எத்தனை பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்" என்றும் உருக்கமாகத் தெரிவித்தார்.

ALSO READ: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட Sachin Tendulkar முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News