இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மக்களை பாடாய் படுத்தி வருகிறது. பாரபட்சமின்றி அனைத்து தரப்பினரையும் தன் பிடியில் சிக்க வைக்கின்றது தொற்று. அந்தந்த துறையை சார்ந்தவர்கள் தங்கள் மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொற்று எளிதில் பரவக்கூடிய முக்கிய துறைகளில் திரைத் துறையும் ஒன்றாகும். படப்பிடிப்பில் அதிக மக்களுக்கான தேவை இருப்பதால், இங்கு தொற்று அதிகமாக பரவுவதற்கான சாத்தியமும் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று (Coronavirus) காரணமாக போடப்பட்ட லாக்டவுனிற்குப் பிறகு, மெல்ல மெல்ல படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. எனினும், பல இடங்களில் படப்பிப்பில் இருந்த பல படப்பிடிப்பு குழுவினருக்கு தொற்று பரவத் தொடங்கியது.


இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய திரைத் துறையான தெலுங்கு திரையுலகம், தன்னுடைய திரையுலகினரை (Cinema Field) பாதுகாக்க புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. தெலுங்கு திரைப்படத் துறையில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் கொரோனா பேரிடர் அறக்கட்டளை மூலம் இலவசமாக தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து தெலுங்கு திரைத் துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கையின் கீழ், தற்போது தெலுங்கு திரைத்துறையில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும். 


ALSO READ: தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி!


தெலுங்கு திரைத்துறையால் எடுக்கப்பட்ட இந்த முயற்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், திரைக் கலைஞர்கள் மட்டுமல்லாமல், கலைஞர்களின் கணவன் அல்லது மனைவிக்கும் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ள கலைஞ்ர்கள் அந்தந்த தொழிற்சங்கங்கள் மூலம் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படும் தகவல்களின் அடிப்படையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு அதற்கேற்ப கலைஞர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். 


கடந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து நாடு முழுதும் கடுமையான லாக்டவுன் விதிக்கப்பட்டது. இந்த லாக்டவுன் காரணமாக பிற துறைகளைப் போல சினிமா துறையும் வெகுவாக பாதிக்கப்பட்டது. தெலுங்கு திரை உலகிலும் கலைஞர்களும் தொழிலாளர்களும் மோசமாக பாதிக்கப்பட்டனர். இந்த இக்கட்டான சூழலில் தெலுங்கு திரைத் துறையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்க கொரோனா க்ரைஸிஸ் தொண்டு நிறுவனத்தை நடிகர் சிரஞ்சீவியும் மற்ற டோலிவுட் பிரபலங்களும் தொடங்கினர். இந்த அமைப்பின் மூலம் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு பலவித உதவிகள் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த இயக்கம் தடுப்பூசி செலுத்தும் செயல்முறையையும் தொடக்கியுள்ளது. 


தெலுங்கு சினிமா துறைக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய இந்த செய்தியை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி (Chiranjeevi) ட்விட்டர் மூலம் தெரிவித்தார். இதைப் பற்றி அறிவித்த சிரஞ்சீவி, திரைப்படத் துறையை கொரோனாவிலிருந்து பாதுகாக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு அப்போலோ மருத்துவர்களுடன் இலவச ஆலோசனை கிடைக்கும் என்றும், தேவையான மருந்துகள் குறைந்த விலையில் வழங்கப்படும் என்றும் நடிகர் சிரஞ்சீவி கூறியுள்ளார்.


தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் இந்த அமைப்பும் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் அதிக அளவிலான பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. 


ALSO READ: Corona தொற்றை ஓட ஓட விரட்டிய சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி... No covid-19!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான 


செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR