Corona தொற்றை ஓட ஓட விரட்டிய சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி... No covid-19!

தெலுங்கு திரையுல சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 13, 2020, 12:18 AM IST
  • ஆச்சார்யா படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு COVID பரிசோதனையை செய்துகொண்டார் சிரஞ்சீவி
  • கடந்த 5 நாட்களில் தன்னை சந்தித்த அனைவரையும் கோவிட் சோதனை செய்துகொள்ளுமாறு சிரஞ்சீவி கேட்டுக்கொண்டார்
  • மூன்று பரிசோதனைகளுக்கு பிறகு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது
Corona தொற்றை ஓட ஓட விரட்டிய சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி... No covid-19!  title=

தெலுங்கு திரையுல சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவுக்கான அறிகுறிகள் எதுவும் அவருக்கு கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
தனக்கு கொரொனா தொற்று இருப்பதை சிரஞ்சீவியே டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
தற்போதும், தனக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை அவரே டிவிட்டர் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். 
“டாக்டர்கள் குழு மூன்று வெவ்வேறு சோதனைகளைச் செய்து, கோவிட் நோய் இல்லை என்று அறிவித்துவிட்டனர். இதற்கு முன்பு செய்யபட்ட பரிசோதனையின் முடிவுக்கு காரணம் பழுதான ஆர்.டி பி.சி.ஆர் கிட் (RT PCR kit) என்று தெரிய வந்துள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் அனைவரும் காட்டிய அக்கறை, அன்புக்கு எனது மனமார்ந்த நன்றி. வணக்கம்!” என்று சிரஞ்சீவி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முந்தைய டிவிட்டரில், “ஆச்சார்யா’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு ஒரு நெறிமுறையாக COVID க்கான ஒரு பரிசோதனையை செய்துகொண்டேன். எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது அறிகுறியில்லாமல் இருக்கிறேன் மற்றும் என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தியுள்ளேன். கடந்த 5 நாட்களில் என்னைச் சந்தித்த அனைவரையும் கோவிட் சோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் எனது உடல்நிலை குறித்து உங்களுக்கு தகவல் வழங்குவேன்” என்று எழுதியிருந்தார்.

அப்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பரான சிரஞ்சீவி குணம் பெற வேண்டும் என்று ரஜினி ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

முன்னதாக 65 வயதான சிரஞ்சீவி தனது ஹைதராபாத் வீட்டில் சுய தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News