கடந்த 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் ‘பாபா’ படம் வெளியானது. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை ஆகியவற்றை ரஜினிகாந்தே  எழுதியதுடன், படத்தையும் அவரே தயாரித்தார்.  இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். அவர் ஏற்கனவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடித்தார். முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, ரியாஸ்கான், எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.


தற்போது இந்தப் படம் மீண்டும் புதுப்பொலிவுடன் திரைக்கு வர இருக்கிறது. முன்பு வெளியானதுபோல் இல்லாமல், படத்தை முழுவதுமாக ரீ எடிட் செய்து வெளியிடப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளதாம். மேலும் 'மாயா மாயா ', 'சக்தி கொடு', 'கிச்சு கிச்சு' என ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் புதிதாகவே ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. படத்திற்கான சிறப்பு சப்தங்களும் கூட சேர்க்கப்பட்டிருக்கிறதாம். 


இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லரை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 



மேலும் படிக்க | மீண்டும் சொல்கிறேன் காஷ்மீர் ஃபைல்ஸ் அந்த மாதிரி படம்தான் - இயக்குநர் அதிரடி


மேலும் படிக்க | விஜய்க்கு வில்லனாக அழைத்த லோகேஷ் கனகராஜ்... மறுத்துவிட்ட கார்த்திக்?


மேலும் படிக்க | தளபதி 67 பூஜையிலிருந்து ஷூட்டிங்வரை - புதிய அப்டேட்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ