சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து மழை - நெகிழ்ந்துபோன பார்த்திபன்
இரவின் நிழல் படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநரும், நடிகருமான பார்த்திபனை பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார்.
புதிய பாதை படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பார்த்திபன் தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசத்தை காட்ட வேண்டுமென்று மெனக்கெடுபவர். அந்தவகையில் அவர் கதையே இல்லாமல் கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் திரையில் உலாவவிட்ட ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையேயும், திரையுலகினரிடையேயும் வரவேற்பையும், ஆச்சரியத்தையும் பெற்றது. ஒத்த செருப்பு படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆகிறது. அபிஷேக் பச்சன் நடிக்கும் படத்தை பார்த்திபனே இயக்குகிறார்.
இந்தச் சூழலில் ஒரே ஷாட்டில் இரவின் நிழல் படத்தை இயக்கி முடித்தார் பார்த்திபன். அந்தப் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. குறிப்பாக, சிங்கிள் ஷாட் என்ற முயற்சிக்காக பார்த்திபனை பாராட்டலாம் அதேவேளை கதை என்று வரும்போது அவரை முழுதாக பாராட்ட முடியவில்லை. இன்னும் கொஞ்சம் கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
மேலும் படிக்க | முடிவுக்கு வந்தது நயன்தாரா- NETFLIX விவகாரம்! - வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!
இதற்கிடையே படத்தின் நாயகி பிரிகிடா சேரி மக்கள் என்று பேசியது, விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படத்தை கடுமையாக விமர்சித்தது என இரவின் நிழல் படம் சில பிரச்னைகளையும் சந்தித்தது.
இந்நிலையில் இரவின் நிழல் படத்தை பார்த்த ரஜினிகாந்த் பார்த்திபனை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவரை தனது இல்லத்துக்கு அழைத்து நேரிலும் பாராட்டினார். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பார்த்திபனை பாராட்டி ரஜினி எழுதியிருக்கும் கடிதத்தில், “இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுத்து, அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்று, உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும்.. அவரது அனைத்து படக்குழுவினருக்கும், மதிப்பிற்குரிய ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும்.. முக்கியமாக படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும்.. எனது மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | அருள்நிதி நடித்த தேஜாவு படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ